Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உவாட்ச்டவர் லைப்ரரி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்—உவாட்ச்டவர் லைப்ரரி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்—உவாட்ச்டவர் லைப்ரரி

உவாட்ச்டவர் லைப்ரரி சாஃப்ட்வேர் வேலை செய்வதற்கு உங்களிடம் Microsoft Windows 7 அல்லது அதைவிட நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் தேவைப்படும். உங்களுடைய கம்ப்யூட்டர் ARM புராஸசரில் இயங்கினால், Microsoft Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவைப்படும்.

 

உவாட்ச்டவர் லைப்ரரி அப்டேட் ஆகவில்லை என்று உங்களுக்குத் திரும்பத் திரும்பக் காட்டினால், இந்த படிகளைப் பின்பற்றி நீங்களாகவே அப்டேட் பேக்கேஜைப் பொருத்தலாம்:

  1. jw.org வெப்சைட்டில் இருக்கும் உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய என்ற பக்கத்துக்குப் செல்லுங்கள்.

  2. உங்களுடைய மொழியில் உவாட்ச்டவர் லைப்ரரி அப்டேட் பேக்கேஜை டவுன்லோட் செய்யுங்கள்.

  3. “அப்டேட் பேக்கேஜை பொருத்த” என்ற தலைப்பின்கீழ் இருக்கும் படிகளைப் பின்பற்றுங்கள்.

இதையெல்லாம் செய்தும், உங்களுடைய பிரச்சினை இன்னும் சரியாகவில்லை என்றால், கீழே சொல்லியிருப்பதுபோல் செய்யுங்கள்:

  1. ஃபைல் எக்ஸ்ப்ளோரரில், ”C:\ProgramData\Watchtower\WTLibrary“ என்ற ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

  2. அங்கே இருக்கும் இந்த இரண்டு ஃபைல்களை டெலீட் செய்யுங்கள்:

    • a. ca-bundle.zip

    • b. cert.pem

இதையெல்லாம் செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், உவாட்ச்டவர் லைப்ரரியைப் பற்றி நன்றாக தெரிந்த ஒரு நண்பரிடம் நீங்கள் உதவி கேட்கலாம். இல்லையென்றால், அருகில் இருக்கும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

 

உவாட்ச்டவர் லைப்ரரியைப் பற்றி நன்றாக தெரிந்த ஒரு நண்பரிடம் நீங்கள் உதவி கேட்கலாம். இல்லையென்றால், அருகில் இருக்கும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.