Skip to content

தனியுரிமை கொள்கை

தனியுரிமை கொள்கை

உங்கள் கவனத்துக்கு: நீங்கள் ஒருவேளை எங்களுடைய வெப்சைட்டைப் பயன்படுத்தினாலோ உங்களைப் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட விவரத்தையும் எங்களுக்குக் கொடுத்தாலோ, அல்லது இவை இரண்டையும் செய்தாலோ உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நாங்கள் பயன்படுத்த வெளிப்படையான ஒப்புதலைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் கொடுக்கும் எல்லா தனிப்பட்ட விவரங்களும், பின்வரும் தனியுரிமை கொள்கையில் விளக்கப்பட்டுள்ள விதமாகவும், அவற்றின் நோக்கத்துக்கு இசைவாகவும் பயன்படுத்தப்படும். அதோடு, தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படியும் பயன்படுத்தப்படும்.

 உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்

உங்களுடைய தனியுரிமையைப் பாதுகாப்பதும் மதிப்பதும் எங்கள் கடமை. இந்தத் தனியுரிமை கொள்கையில் விளக்கப்பட்டுள்ளபடி, உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்கிற அல்லது நீங்கள் எங்களுக்குத் தருகிற எந்தவொரு தனிப்பட்ட விவரமும் எங்கள் வெப்சைட்டில் பயன்படுத்தப்படும். எங்களுடைய வெப்சைட்டை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம். அவற்றைப் பாதுகாப்பதும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருக்கிறோம். தனிப்பட்ட விவரங்கள் என்று கருதப்படும் தகவல்களை நீங்கள் எங்களுக்குக் கொடுக்க விரும்பலாம். உங்களுடைய பெயர், ஈ-மெயில் ஐ.டி., விலாசம், தொலைப்பேசி எண், அல்லது உங்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எந்தவொரு தகவலும் இந்த ‘தனிப்பட்ட விவரங்களில்’ அடங்கும். எங்களுடைய வெப்சைட்டைப் பார்ப்பதற்கு நீங்கள் எந்தத் தனிப்பட்ட தகவலையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. “வெப்சைட்” என்று சொல்லும்போது அதில் இந்த வெப்சைட்டும், இதனோடு சம்பந்தப்பட்ட வெப்சைட்டுகளும், அதாவது apps.ps8318.com, ba.ps8318.com, stream.ps8318.com, wol.ps8318.com போன்றவையும் அடங்கும்.

 தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவோரின் தகவல்

இந்த வெப்சைட், Watchtower Bible and Tract Society of New York, Inc.-க்கு (“Watchtower”-க்கு) சொந்தமானது. நியு யார்க்கில் இருக்கும் இந்த அமைப்பு, யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளையும் அவர்களுடைய பைபிள் கல்வித் திட்டத்தையும் ஆதரிக்கிறது. இது லாப நோக்கத்துக்காகச் செயல்படும் நிறுவனம் அல்ல. இந்த வெப்சைட்டில் நீங்களாகவே ஒரு அக்கவுண்ட்டை ஆரம்பிக்க விரும்பினால்... இந்த வெப்சைட் மூலம் நன்கொடை கொடுக்க விரும்பினால்... உங்களை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொள்ள விரும்பினால்... உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து வெப்சைட்டில் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பினால்... இந்தத் தனியுரிமை கொள்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமல்ல, நீங்கள் கொடுக்கும் விவரங்கள் அமெரிக்காவிலுள்ள சர்வர்களில் (servers) பதிவு செய்யப்படுவதற்கும் ஒப்புதல் தெரிவிக்கிறீர்கள். அதோடு, காவற்கோபுர அமைப்பும் சரி, மற்ற நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை ஆதரிக்கும் அவர்களுடைய மற்ற அமைப்புகளும் சரி, நீங்கள் கேட்டுக்கொண்ட விஷயங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும், வேறொரு இடத்துக்கு அனுப்புவதற்கும், சேமித்து வைப்பதற்கும் ஒப்புதல் தெரிவிக்கிறீர்கள். இந்த மத அமைப்பு உலகம் முழுவதுமுள்ள அதன் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள், கிளை அலுவலகங்கள், யெகோவாவின் சாட்சிகளின் இதுபோன்ற அமைப்புகள் உட்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட விவரங்களை இவை பாதுகாக்கின்றன.

நீங்கள் வெப்சைட்டை எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்துகிறீர்களோ அதைப் பொறுத்து உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களும் வித்தியாசப்படலாம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் சட்டப்பூர்வ நிறுவனத்துக்கு நீங்கள் நன்கொடை கொடுப்பதாக இருந்தால், உங்கள் பெயரும் உங்களைத் தொடர்புகொள்வதற்கான தகவலும் அந்தச் சட்டப்பூர்வ நிறுவனத்துக்கு அளிக்கப்படும். மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். நீங்கள் ஒருவேளை பைபிள் படிப்புக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், உங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்ற உங்களுடைய பெயரும், உங்களைத் தொடர்புகொள்வதற்கான தகவலும் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் கிளை அலுவலகத்துக்கும் சபைக்கும் அளிக்கப்படும்.

நீங்கள் வாழ்கிற நாட்டில், தகவல் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தால் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள “தகவல் பாதுகாப்பு தொடர்பு” என்ற பக்கத்திலுள்ள விலாசத்தைப் பாருங்கள்.

 தகவல் பாதுகாப்பும் ரகசியம் காப்பதும்

உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதற்கும் அதை ரகசியமாக வைப்பதற்கும் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். தகவலைச் சேமிப்பதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். அதனால், அதிகாரம் இல்லாத யாராலும் உங்கள் தகவல்களைப் பார்க்க முடியாது. யாராலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தவோ மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவோ முடியாது. அதிலிருக்கும் விவரங்களை அனுமதியில்லாமல் மாற்றவோ சட்டவிரோதமாக அந்தத் தகவல்களை அழிக்கவோ தெரியாத்தனமாகத் தொலைத்துவிடவோ முடியாது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துகிறவர்களும் அவற்றைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கிற மூன்றாம் தரப்பினர்களும் அந்த விவரங்களை ரகசியமாக வைக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தகவல்கள் என்ன நோக்கத்துக்காக உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்வரை மட்டுமே அவற்றை நாங்கள் வைத்துக்கொள்வோம். அல்லது, அந்தத் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துக்கு இசைவாகவோ ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துக்கு இசைவாகவோ அவற்றை வைத்துக்கொள்வோம்.

உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எலெக்ட்ரானிக் முறையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும்போது Transport Layer Security (TLS) போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் தகவல்களை கம்ப்யூட்டர்களில் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் நாங்கள் வைக்கிறோம். இந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதோடு, உங்களுடைய விவரங்கள் எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அதற்கு, முறைப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதிகாரம் இல்லாதவர்கள் கையில் இந்தத் தகவல்கள் கிடைக்காமல் இருப்பதற்கு கடுமையான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகிறோம்.

 மைனர் பிள்ளைகள்

நீங்கள் எங்கள் வெப்சைட்டைப் பயன்படுத்தும் ஒரு மைனராக இருந்தால், நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டின் சட்டத்தின்படி, உங்களுடைய அப்பா-அம்மா அல்லது உங்கள் பாதுகாவலரின் அனுமதியோடு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் ஒரு மைனர் பிள்ளையின் அப்பாவாக, அம்மாவாக அல்லது பாதுகாவலராக இருந்தால், இந்த வெப்சைட்டில் அந்தப் பிள்ளை தன்னுடைய தகவலை அளிக்க நீங்கள் அனுமதி கொடுத்தால், மைனர்கள் சம்பந்தப்பட்ட இந்தத் தனியுரிமை கொள்கையிலுள்ள விஷயங்களை ஒப்புக்கொள்கிறீர்கள்.

 மூன்றாம் தரப்பினர்கள்

சில சமயங்களில் இந்த வெப்சைட்டில் மூன்றாம் தரப்பினரின் லிங்க் இருக்கும். எங்கள் சார்பாக சில வேலைகளைச் செய்வதற்கு (உதாரணத்துக்கு, ஆன்லைன் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு) அப்படிப்பட்ட மூன்றாம் தரப்பினரின் சேவைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். அந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்யும்போது, மூன்றாம் தரப்பினரின் வெப்சைட்டைப் பார்ப்பீர்கள். அதன் தோற்றம் வித்தியாசமாக இருக்கும்; பிரவுசரிலிருக்கும் (browser) அட்ரஸ் பார்கூட மாறியிருக்கும். அதோடு, இந்த வெப்சைட் மூலம் நீங்கள் ஏதாவது தகவலைக் கேட்டிருந்தால், மூன்றாம் தரப்பினர் மூலம் உங்களுக்கு ஈமெயில்கள் அல்லது மெசேஜ்கள் வரலாம். உதாரணத்துக்கு, நீங்கள் கேட்டிருக்கும் தகவல் தொடர்பான அறிவிப்புகள் உங்களுக்கு அனுப்பப்படலாம். மூன்றாம் தரப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, அவர்களுடைய தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு கொள்கைகள் நம்முடைய தனியுரிமை கொள்கைகளோடு ஒத்துப்போகிறதா என்று அடிக்கடி ஆராய்ந்து பார்க்கப்படும். ஆனால், இந்த மூன்றாம் தரப்பினர்கள் அளிக்கும் அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட புரோகிராமிங், பயன்பாட்டு விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், பொதுவான நிபந்தனைகள் ஆகியவை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், இந்த வெப்சைட்டில், நீங்கள் அந்த அப்ளிகேஷன்களையும் சேவைகளையும் பயன்படுத்தினால், மூன்றாம் தரப்பினர் விதித்திருக்கும் சேவை விதிமுறைகளுக்கும் பொது நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். அவர்கள் செய்யும் அப்டேட்டுகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படாது. அதனால், மூன்றாம் தரப்பினரின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவர்களுடைய விதிமுறைகளைப் பற்றித் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவேளை ஒரு மூன்றாம் தரப்பினரின் கொள்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்களுடைய வெப்சைட்டின் தனியுரிமை கொள்கையைப் பாருங்கள்.

 இந்த வெப்சைட்டில் கூகுள் வரைபடங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தினால், தற்போதைய கூகுள் தனியுரிமைக் கொள்கைக்குக் கட்டுப்பட வேண்டும். கூகுள் ஒரு மூன்றாம் தரப்பு விற்பினையாளர் என்பதால், கூகுளின் அப்ளிகேஷன்களும், புரோகிராமிங்கும், சேவை விதிமுறைகளும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், இந்த வெப்சைட்டில் நீங்கள் கூகுள் வரைபடங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், தற்போதைய கூகுள் வரைபடங்கள்/கூகுள் எர்த் சேவைக்கான கூடுதல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அவர்கள் செய்யும் அப்டேட்டுகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படாது. அதனால், கூகுள் வரைபடங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவர்களுடைய விதிமுறைகளைப் பற்றித் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், கூகுள் வரைபடங்கள் சேவைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

இந்தத் தனியுரிமை கொள்கையில் செய்யப்படும் மாற்றங்களை அறிவித்தல்

 இந்த வெப்சைட்டில், இன்னும் சில அம்சங்களையும், செயல்பாடுகளையும் சேர்ப்பதோடு, அதை இன்னும் சிறப்பானதாக ஆக்கவும் முயற்சி செய்கிறோம். எங்களுடைய சேவைகளை இன்னும் சிறப்பானதாக ஆக்கவும், புது புது சேவைகளை அளிக்கவும் முயற்சி செய்கிறோம். தொடர்ச்சியான இந்த மாற்றங்களின் காரணமாகவும்... தொழில்நுட்பம் மற்றும் சட்டத்தில் வரும் மாற்றங்களின் காரணமாகவும்... தகவல்களை நாங்கள் அவ்வப்போது மாற்றுகிறோம். அப்படிப்பட்ட சமயங்களில், எங்கள் தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த மாற்றத்தைப் பற்றி இந்தப் பக்கத்தில் குறிப்பிடுவோம். அப்போதுதான் நாங்கள் என்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் அல்லது ஜாவா ஸ்கிரிப்ட்

நம்முடைய வெப்சைட் செயல்படும் விதத்தை மேம்படுத்துவதற்கு ஸ்கிரிப்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். தகவல்களை இந்த வெப்சைட் உங்களுக்கு வேகமாக அளிப்பதற்கு ஸ்கிரிப்டிங் தொழில்நுட்பம் உதவுகிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதற்கோ, உங்கள் அனுமதியில்லாமல் உங்களுடைய தகவலைப் பெற்றுக்கொள்வதற்கோ இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்த வெப்சைட்டிலுள்ள சில பாகங்கள் ஒழுங்காக இயங்குவதற்கு பிரவுசரிலுள்ள ஆக்டிவ் ஸ்கிரிப்டிங்கை அல்லது ஜாவா ஸ்கிரிப்ட்டை எனேபிள் (enable) செய்ய வேண்டும். நிறைய பிரவுசர்கள், குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளில் இந்த அம்சத்தை எனேபிள் அல்லது டிசேபிள் (disable) செய்ய அனுமதிக்கின்றன. குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளில் ஸ்கிரிப்டிங்கை எப்படி எனேபிள் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள பிரவுசரிலுள்ள Help ஆப்ஷனைப் பாருங்கள்.