Skip to content

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்?

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்?

 ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களில் அநேகர் பைபிள் விஷயங்களை சந்தோஷமாக கலந்துரையாடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.மற்றவர்களுடைய மத நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம் அது அவர்களுடைய உரிமை; அதோடு, நாங்கள் சொல்லும் செய்தியை அவர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதில்லை.

 மதத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பேசுங்கள் என்ற பைபிளின் அறிவுரையை நாங்கள் பின்பற்ற முயலுகிறோம். (1 பேதுரு 3:15) நாங்கள் சொல்லும் செய்தியை சிலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். (மத்தேயு 10:14) ஆனால், வீட்டுக்காரரிடம் பேசிய பிறகுதானே அவருடைய பிரதிபலிப்பு எங்களுக்கு தெரிய வரும்? மக்களின் சூழ்நிலைமைகள் மாறும் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.

 உதாரணத்திற்கு, ஒரு நாள் ரொம்ப பிஸியாக இருக்கும் ஒரு நபர், வேறொரு நாள் நன்றாக பேசலாம். மேலும், மக்கள் புதுப்புது பிரச்சினைகளையும் சூழ்நிலைகளையும் எதிர்ப்படுவதால் நாங்கள் சொல்லும் பைபிளின் செய்தியில் அக்கறை காட்டலாம். எனவே, பல சந்தர்ப்பங்களில் மக்களை சந்தித்து பேச நாங்கள் முயற்சி செய்கிறோம்.