Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

சிலர் சொல்கிறார்கள்... கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒருவருடைய இதயத்தில் இருக்கிறது, மனசில் இருக்கிறது. வேறு சிலர் சொல்கிறார்கள்... மனிதர்களுடைய முயற்சியால் உலக சமாதானம் வரும், எல்லாரும் ஒற்றுமையாக இருப்பார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

“பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; . . . அந்த ராஜ்யம் . . . [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) கடவுளுடைய ராஜ்யம் என்பது நிஜமான ஒரு அரசாங்கம்.

பைபிளிலிருந்து வேறென்ன தெரிந்துகொள்ளலாம்

  • கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது.—மத்தேயு 10:7; லூக்கா 10:9.

  • பரலோகத்திலும் பூமியிலும் கடவுள் தன் விருப்பத்தை நிறைவேற்ற இந்த அரசாங்கத்தைத்தான் பயன்படுத்துகிறார்.—மத்தேயு 6:10.

கடவுளுடைய ராஜ்யம் எப்போது வரும்?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

  • யாருக்கும் தெரியாது

  • சீக்கிரத்தில் வரும்

  • வரவே வராது

பைபிள் தரும் பதில்

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14) நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்பட்டதும் கடவுளுடைய அரசாங்கம் கெட்ட ஜனங்களை அழித்துவிடும்.

பைபிளிலிருந்து வேறென்ன தெரிந்துகொள்ளலாம்

  • கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சியை ஆரம்பிக்கும் என்று பூமியில் இருக்கிற யாருக்கும் துல்லியமாகத் தெரியாது.—மத்தேயு 24:36.

  • கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது.—மத்தேயு 24:3, 7, 12. ▪ (wp16-E No. 5)