காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2017  

ஜூலை 31–ஆகஸ்ட் 27, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

எல்லா சோதனைகளிலும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்

திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்தவர்கள் இன்று என்ன சில பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்? நீங்கள் அது போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கிறீர்கள் என்றால், கடவுளிடமிருந்து நீங்கள் எப்படி ஆறுதலைப் பெறலாம்?

ஆன்மீகப் பொக்கிஷங்களை உயர்வாக மதியுங்கள்!

எந்தப் பொக்கிஷங்களை நாம் உயர்வாக மதிக்க வேண்டும்? அதை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?

துறவி போல் தெருவில் வாழும் அருவருப்பான ஒரு மனிதரிடம் பொறுமையாகப் பேசியதால் என்ன ஆனது?

பிரச்சினையைச் சரிசெய்துகொண்டு சமாதானமாக இருப்பீர்களா?

மக்கள் சமாதானமாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், பொறுப்புகள் பறிபோய் விடும் என்ற பயத்தாலும், பொறாமை என்ற குணத்தாலும் நிறைய பேர் சமாதானமற்ற வழியில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். நீங்கள் அந்த மாதிரி செயல்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

“புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”

அபிகாயிலைப் புகழ்ந்து பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த தாவீது சொன்ன வார்த்தைகள்தான் இவை! அபிகாயிலைப் புகழ்ந்து பேச தாவீதை எது தூண்டியது? அபிகாயிலின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!

மனிதர்களுக்கு இருக்கிற மிக முக்கியமான விஷயம் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருப்பது ஏன் முக்கியம்?

யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!

இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

உங்களுக்குத் தெரியுமா?

எருசலேம் ஆலயத்தில் மிருகங்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று இயேசு ஏன் சொன்னார்?