Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலக சமாதானம் வெறும் கனவல்ல!

உலக சமாதானம் வெறும் கனவல்ல!

உலக சமாதானம் வெறும் கனவல்ல!

ஆல்ஃபிரெட் நோபலால் கடந்த நூற்றாண்டை திரும்பிப் பார்க்க முடிந்தால் உலக சமாதானம் வரும் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்திருக்குமா? யுத்தத்திற்கு முடிவுகட்ட அநேகர் பெரும்பாடு பட்டிருப்பதைக் கண்டு அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார். என்றாலும், கோரமான உண்மையை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். அதை பேராசிரியர் ஹியூ தாமஸ் இவ்வாறு அழகாக தொகுத்துரைக்கிறார்: “இந்த 20-⁠ம் நூற்றாண்டு பொதுவாக சமூக முன்னேற்றத்திற்கும் ஏழைகளின் வாழ்வில் அரசாங்கம் அதிக அக்கறை காண்பித்திருப்பதற்கும் அறியப்பட்டிருக்கிற போதிலும், இயந்திர துப்பாக்கி, டாங்கி, பி-52 விமானம், அணு குண்டு, கடைசியாக ஏவுகணை போன்றவையே அதை ஆக்கிரமித்துள்ளன. மற்ற எந்த காலத்தையும்விட அதிக இரத்தம் சிந்திய, அதிக அழிவை ஏற்படுத்திய யுத்தங்களும் இந்தச் சமயத்தில்தான் நிகழ்ந்துள்ளன.” பேராசிரியர் தாமஸ் மேலும் கூறுவதாவது: “ஆகவே, அதை உண்மையில் முன்னேற்றத்தின் காலப்பகுதி என்று சொல்வதா இல்லையா என்பது ஒருவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்ததே.”

இப்போது நாம் 21-⁠ம் நூற்றாண்டில் காலடியெடுத்து வைத்திருப்பதால் உலக சமாதானத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றனவா? இல்லவே இல்லை! 2001, செப்டம்பர் 11-⁠ல் நியூ யார்க் மாநகரத்திலும் வாஷிங்டன், டி.சி.-யிலும் நடந்த தாக்குதல்களை குறிப்பிடுவதாக நியூஸ்வீக் பத்திரிகை கூறுவதாவது: “767 போயிங் விமானங்களை, தூரத்திலிருந்தே இயக்கும் ஏவுகணைகளைப் போல பயன்படுத்த முடிந்த ஓர் உலகில், எதுவும் சாத்தியம், எதுவும் நடக்கலாம், எதையும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.”

உலக சமாதானம் வர இரண்டு காரியங்கள் நிகழ வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்: முதலாவதாக, மனிதர்களின் கண்ணோட்டத்திலும் நடத்தையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ வேண்டும்; இரண்டாவதாக, எல்லா தேசங்களும் ஒரே அரசாங்கத்தில் ஒன்றுபட வேண்டும். சமாதானம் சாத்தியமாகும் காலத்தைப் பற்றி பைபிள் கூறுகிறது; ஆனால் அது மனித முயற்சிகளால் கிடைக்காது. ‘அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்’ என்று சிருஷ்டிகரான யெகோவா தேவனைப் பற்றி சங்கீதம் 46:9 கூறுகிறது. கடவுள் இதை எவ்வாறு செய்வார்? அவருடைய ராஜ்யத்தின் வாயிலாக செய்வார், அதற்காகத்தான் உண்மை மனதுள்ள அநேகர் திரும்பத் திரும்ப ஜெபம் செய்திருக்கின்றனர். அந்த ராஜ்யம், ஒருவரின் இருதயத்தில் நிலவும் புரிந்துகொள்ள முடியாத நிலைமை அல்ல, மாறாக பூமியின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை சமாதானத்தை ஸ்தாபிக்க கடவுள் உபயோகிக்கும் உண்மையான அரசாங்கமாகும். அந்த அரசாங்கத்தின் குடிமக்கள் “இனி . . . யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்று ஏவப்பட்ட தீர்க்கதரிசி ஏசாயா முன்னுரைத்தார். (ஏசாயா 2:4) உலகளாவிய கல்வித்திட்டத்தின் வாயிலாக சமாதானத்தோடு வாழ மக்கள் கற்றுக்கொள்வர், இவ்வாறு “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்.”

யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுதே இதைச் செய்து வருகிறார்கள். அவர்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்கள், 200-⁠க்கும் அதிகமான நாடுகளில் வாழ்கிறார்கள் என்றாலும் தங்கள் அயலானுக்கு எதிராக ஆயுதத்தை தூக்க மறுக்கிறார்கள். யுத்தத்தால் சீரழிந்த இந்த உலகிலும் அவர்கள் நடுநிலைமை வகிப்பது சாத்தியமென்றால், சமாதானம் என்பது வெறும் ஆசை கனவல்ல மாறாக சாத்தியமான ஒன்றே என்பது தெளிவாக உள்ளது.

உண்மை சமாதானத்திற்கான பைபிள் அடிப்படையிலான நம்பிக்கை பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தயவுசெய்து, பக்கம் 5-⁠ல் உள்ள விலாசங்களில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஒன்றை உபயோகித்து இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள் அல்லது உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள். (g02 5/8)