Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

ஏன் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

ஏன் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போக பிடிக்குமா?

பிடிக்கும் பிடிக்காது

சபாஷ்! தொடர்ந்து போங்கள் ருசித்து மகிழ என்ன செய்யலாம்?

கிறிஸ்தவர்கள் வழிபாட்டிற்காக ஒன்றுகூடி வர வேண்டும் என்பது பைபிளின் கட்டளை. (எபிரெயர் 10:25) ஆனால், அங்கு போகவே பிடிக்கவில்லை என்றால்? கூட்டங்களில் இருக்கும்போது வேறு எங்கோ இருந்து ஏதாவது செய்வதுபோல் உங்கள் மனம் பகல் கனவு காண்கிறதென்றால்? பின்வரும் சில ஆலோசனைகளை முயன்று பாருங்களேன்.

1. ஒழுங்கு

முக்கிய வசனம்: ‘சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடக்கூடாது.’—எபிரெயர் 10:25.

உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்காவிட்டாலும் ஏன் அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும்? அப்படி செய்தால்தான் அதில் பிடிப்பு வரும்! இப்படி யோசித்துப் பாருங்கள்: ஒரு விளையாட்டை எப்போதாவது ஒருமுறை விளையாடினால் அதன்மேல் ஆர்வம் வருமா? அதில் படு கில்லாடி ஆகிவிடுவீர்களா? கிறிஸ்தவ கூட்டங்களைப் பொறுத்ததிலும் இதுதான் உண்மை. கூட்டங்களுக்கு ஒழுங்காக போகப் போகத்தான் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். பிறகு ஒரு கூட்டத்தையும் தவறவிட மாட்டீர்கள்!—மத்தேயு 5:3.

டிப்ஸ்: ஒவ்வொரு முறையும் கூட்டம் முடிந்தபின் பேச்சுக் கொடுத்த ஒருவரையாவது பாராட்டுங்கள். உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்த ஒரு குறிப்பை டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக கூட்டங்களில் ஊழியத்தைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொடுப்பார்கள். கற்றுக்கொண்டதை மனதில் வைத்து மற்றவர்களிடம் இன்னும் நன்றாகப் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்போது, கூட்டங்கள் உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

“கூட்டங்களை ‘கட்’ அடிக்கக் கூடாதுனு சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. சின்ன பிள்ளையா இருந்தப்போகூட கூட்டத்துக்கு போகாம இருக்கணும்னு நான் நெனச்சதே இல்ல. இப்பவும் கூட்டத்துக்கு போகாம இருக்க மனசு வராது.”—கெல்ஸி.

நெஞ்சில் நிறுத்த: கூட்டங்களுக்கு ஒழுங்காக போகிறவர்கள் அதை ரசித்து ருசித்து மகிழ்வார்கள். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

2. கவனம்

முக்கிய வசனம்: “நீங்கள் கேட்கிற விதத்திற்குக் கவனம் செலுத்துங்கள்.”—லூக்கா 8:18.

ஒரு நிகழ்ச்சியில் கேட்ட விஷயங்களில் 60 சதவீதத்தை ஒருவர் அந்த நாளின் முடிவில் மறந்து விடுவார் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதேபோல உங்களிடம் இருக்கும் பணம் சீக்கிரமாகப் பறந்து போனால், அதைச் சேமித்து வைக்க ஏதாவது செய்ய மாட்டீர்களா?

டிப்ஸ்: உங்கள் பெற்றோருடன் முன் வரிசையில் உட்கார்ந்தால் கவனம் சிதறாமல் இருக்கும். குறிப்பு எடுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கவனிப்பார்கள். ஆனால், குறிப்பு எடுத்துக்கொள்வதுதான் மனதை அலைபாயவிடாமல் பேச்சை கவனிக்க சிறந்த வழி. பிற்பாடு எடுத்துப் பார்ப்பதற்கும் அது உதவியாக இருக்கும்.

“முன்பெல்லாம் கூட்டங்கள்ல கவனிச்சி கேட்பது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, இப்போ முன்னேறிட்டேன். சர்ச்சுக்கு போற மாதிரி ஏதோ கடமைக்காக நான் கூட்டத்துக்கு போகலங்கறத மனசுல வச்சிப்பேன். கடவுள வணங்கவும் வாழ்க்கைக்குத் தேவையானத கற்றுக்கவும்தான் போறேன்.”—கேத்லின்.

நெஞ்சில் நிறுத்த: கூட்டத்திற்கு போய்விட்டு கவனிக்காமல் வருவது, விருந்து வீட்டிற்கு போய்விட்டு வெறும் வயிற்றோடு திரும்பி வருவதைப் போலிருக்கும்.

3. ஈடுபாடு

முக்கிய வசனம்: “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.”—நீதிமொழிகள் 27:17, பொது மொழிபெயர்ப்பு.

இளைஞராக இருப்பதால் உங்கள் திறமையை லேசாக எண்ணிவிடாதீர்கள். சபைக்கு நீங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். உங்களுடைய அன்பான பேச்சு, அருமையான பதில்கள் எல்லாம் விலைமதிக்க முடியாத சொத்துக்கள்.

டிப்ஸ்: கேள்வி-பதில் கலந்துரையாடலின்போது ஒரு பதிலாவது சொல்ல இலக்கு வையுங்கள். கூட்டங்களுக்கு முன்பும், பின்பும், இடையிலும் சுத்தம் செய்ய அல்லது வேறு வேலைகளைச் செய்ய உதவுங்கள். இதுவரை பழகாதவர்களோடு பேசிப் பழகுங்கள்.

“எனக்கு 14,15 வயசு இருக்கும்போது கூட்டத்திற்காக, ஸ்டேஜ் ஒழுங்குபடுத்துவேன், பதில் சொல்றவங்களுக்கு மைக் கொடுப்பேன். அந்த பொறுப்புகள் இருந்ததால என்னை முக்கியமானவனா நெனச்சி சரியான நேரத்துக்கு கூட்டத்துக்கு போவேன். இது ஆன்மீக விஷயங்கள்ல ரொம்ப ஆர்வமா இருக்க உதவியா இருந்தது.”—மைல்ஸ்.

நெஞ்சில் நிறுத்த: கூட்டத்தில் சும்மா இருக்காதீர்கள். ஏதாவது செய்யுங்கள். கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்து இருக்காமல் உற்சாகமாகக் கலந்துகொள்ளுங்கள். (g12-E 04)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[பக்கம் 27-ன் பெட்டி/படங்கள்]

உங்களை வரவேற்கிறோம்!

கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள...

● சிறந்த நபராய் வாழ...

● நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க...

விரும்புகிறீர்களா?

இதற்கு மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் உதவி செய்யும். வாரத்தில் இரண்டு முறை யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்திற்காக ராஜ்ய மன்றங்களில் கூடி வருகிறார்கள். அங்கே பணம் வசூலிக்க மாட்டார்கள், எல்லாருமே வரவேற்கப்படுகிறார்கள்.

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ராஜ்ய மன்றம் மற்ற சர்ச்சுகளைப் போன்றது அல்ல. அங்கே, பைபிளை முக்கியமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சிறப்பாக வாழ கடவுளுடைய வார்த்தை எப்படி உதவுமென நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்!—உபாகமம் 31:12; ஏசாயா 48:17.

ஸாய்முதல் முதலா ராஜ்ய மன்றத்துக்குள்ள காலெடுத்து வச்சப்போ ஆச்சரியமா இருந்தது. அங்க எந்த சிலையும் இல்ல, யாரும் சாமியார் மாதிரி டிரஸ் போடல, யாரும் காணிக்கை கேக்கல. வாங்க வாங்கணு எல்லாரும் அன்பா கூப்பிட்டாங்க. பழக்கமான இடத்தில இருக்கிற மாதிரி தோணிச்சி. அங்க சொன்ன எல்லா விஷயங்களும் நல்லா புரிஞ்சிது, பிரயோஜனமா இருந்திச்சி. நான் தேடிட்டு இருந்த சத்தியம் இதுதான்!

டயானீராநான் முதல் முதலா யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்கு போனப்போ எனக்கு 14 வயசுதான். எல்லாருமே என்னை அன்பா வரவேற்றாங்க, ரொம்ப அக்கறையா நடந்துகிட்டாங்க. நான் வந்ததால எல்லாருமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதனால, மறுபடியும் அங்க போக எனக்கு கூச்சமாவே இல்ல!

[பக்கம் 28-ன் பெட்டி]

அடுத்த சபைக் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படும் எனப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமான ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து . . .

வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்

கூட்டத்திற்கு முன் இதை கூட்டத்திற்குப் பின் இதை

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

பகுதி: என்ன கற்றுக்கொண்டேன்:

․․․․․ ․․․․․

இதைப் பற்றி நான் இன்னும் பேச்சு கொடுத்தவர் சொன்ன எந்த

என்ன தெரிந்துகொள்ள வேண்டும்: விஷயத்தை சொல்லி அவரை

பாராட்டலாம்:

․․․․․ ․․․․․