Skip to content

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . .

  • வருவார்கள்?

  • வர மாட்டார்கள்?

  • வரலாம்?

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

இறந்தவர்கள் “உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”​—அப்போஸ்தலர் 24:15, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

ஆறுதல் கிடைக்கும்.—2 கொரிந்தியர் 1:3, 4.

மரண பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.—எபிரெயர் 2:15.

இறந்துபோன உங்கள் அன்பானவர்களோடு மீண்டும் ஒன்றுசேர முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும்.—யோவான் 5:28, 29.

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். மூன்று காரணங்களுக்காக:

  • கடவுள்தான் எல்லா உயிரினங்களையும் படைத்தவர். யெகோவாவை (கடவுளுடைய பெயர்) “உயிரின் ஊற்று” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:24, 25) எல்லா உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்த கடவுளால், இறந்துபோன ஒருவருக்கு திரும்பவும் உயிர் கொடுக்க முடியும்.

  • கடந்த காலத்தில் சிலரைக் கடவுள் உயிரோடு எழுப்பியிருக்கிறார். சிறியோர்-பெரியோர், ஆண்கள்-பெண்கள் என இறந்துபோன எட்டுப் பேர் உயிரோடு எழுப்பப்பட்டதாக பைபிள் சொல்கிறது. அவர்களில் சிலர் இறந்து கொஞ்ச நேரத்திலேயே உயிரோடு எழுப்பப்பட்டார்கள்; ஒருவர், அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரோடு எழுப்பப்பட்டார்!—யோவான் 11:39-44.

  • இறந்தவர்களை உயிரோடு எழுப்ப கடவுள் ஆவலாக இருக்கிறார். யெகோவா மரணத்தை வெறுக்கிறார்; அதை ஒரு எதிரியாகப் பார்க்கிறார். (1 கொரிந்தியர் 15:26) உயிர்த்தெழுதல் மூலம் மரணம் என்ற எதிரியை ஒழித்துக்கட்ட அவர் “ஏக்கமாக” இருக்கிறார். தன் நினைவில் இருப்பவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பவும், அவர்கள் இந்தப் பூமியில் வாழ்வதைப் பார்க்கவும் அவர் ஆசை ஆசையாக இருக்கிறார்.—யோபு 14:14, 15.

சிந்தித்துப் பாருங்கள்

நாம் ஏன் வயதாகி சாகிறோம்?

பைபிளின் பதில்: ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12.