Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருண்ட உலகில் சுடர்விடும் நம்பிக்கை

இருண்ட உலகில் சுடர்விடும் நம்பிக்கை

இருண்ட உலகில் சுடர்விடும் நம்பிக்கை

“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்.”​—2 தீமோத்தேயு 3:1.

பின்வரும் சோக சம்பவங்களில் எதையாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அல்லது நேரில் பார்த்திருக்கிறீர்களா?

● எக்கச்சக்கமானவர்களின் உயிரைக் குடிக்கும் கொடிய நோய்.

● நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறிக்கும் பஞ்சம்.

● ஆயிரக்கணக்கானோரைக் கொன்று அநேகரை வீதிக்குக் கொண்டுநிறுத்தும் நிலநடுக்கம்.

இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றிய சிந்திக்க வைக்கும் சில உண்மைத் தகவல்களை அடுத்து வரும் பக்கங்களில் நீங்கள் பார்ப்பீர்கள். ‘கடைசி நாட்கள்’ என்று சொல்லப்படுகிற காலப்பகுதியில் நடக்கிற இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி பைபிள் ஏற்கெனவே என்ன சொல்லியிருக்கிறது என்றும் பார்ப்பீர்கள்.

கஷ்டங்கள் நிறைந்த இருண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உங்களுக்குப் புரியவைப்பதற்காக இந்தக் கட்டுரைகள் தயாரிக்கப்படவில்லை. ஏனென்றால், கஷ்டங்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரைகள், முக்கியமாக உங்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, ‘கடைசி நாட்கள்’ சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்பதை இந்த ஆறு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் எப்படிக் காட்டுகிறது என்பதையும் தெரிந்துகொள்வீர்கள். இது சம்பந்தமாக மக்கள் பொதுவாகத் தெரிவிக்கிற ஆட்சேபணைகளைப் பற்றியும், ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்பதை நம்புவதற்கான காரணங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரைகளிலிருந்து தெரிந்துகொள்வீர்கள்.