Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 18

கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

1 கொரிந்தியர் 9:19-23

சுருக்கம்: கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுங்கள்; பிரயோஜனமான விஷயங்களைக் கற்றுக்கொண்ட திருப்தி அவர்களுக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களுக்கு ஏற்கெனவே என்ன தெரியும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையே திரும்பச் சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் பேசும் விஷயத்தைப் புதிய கோணத்தில் பார்க்க உதவி செய்யுங்கள்.

  • ஆராய்ச்சி செய்யுங்கள், ஆழ்ந்து யோசியுங்கள். முடிந்தால், கேட்பவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத தகவல்களை அல்லது சமீபத்தில் நடந்த சம்பவங்களை உதாரணமாகப் பயன்படுத்தி முக்கியக் குறிப்புகளை விளக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் உதாரணம், நீங்கள் பேசப்போகும் விஷயத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்.

  • நீங்கள் சொல்வது எவ்வளவு பிரயோஜனமானது என்பதைக் காட்டுங்கள். பைபிளிலுள்ள குறிப்புகள் அன்றாட வாழ்க்கைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதை விளக்குங்கள். எந்தெந்த சூழ்நிலைகளையும், மனப்பான்மைகளையும், செயல்களையும் பற்றிப் பேசினால் கேட்பவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமோ அவற்றையே பேசுங்கள்.