எபிரெயருக்குக் கடிதம் 8:1-13

8  இதுவரை சொன்ன விஷயங்களின் முக்கியக் குறிப்பு என்னவென்றால்: பரலோகத்தில் மகிமையுள்ளவரின் சிம்மாசனத்துக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரும்,+  மனிதனால் இல்லாமல் யெகோவாவினால்* அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்+ சேவை* செய்கிறவருமானவர்தான் நமக்குத் தலைமைக் குருவாக இருக்கிறார்.+  ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் கொடுப்பதற்கு நியமிக்கப்படுகிறார். அதனால், இவரும்கூட ஏதோவொன்றைப் பலி கொடுப்பது அவசியமாக இருந்தது.+  இப்போது இவர் பூமியில் இருந்திருந்தால் ஒரு குருவாக இருந்திருக்க மாட்டார்.+ ஏனென்றால், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைக் கொடுப்பதற்கு மற்ற குருமார்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.  ஆனாலும், இவர்கள் செய்யும் பரிசுத்த சேவை பரலோகக் காரியங்களின்+ மாதிரிப் படிவமாகவும் அவற்றின் நிழலாகவும்தான் இருக்கிறது.+ மோசே கூடாரத்தை அமைப்பதற்குப் போனபோது, “மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்” என்ற கட்டளையைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.+  ஆனால் இப்போது, இயேசு அதைவிட சிறப்பான சேவையைச் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால், முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட மேலான ஒப்பந்தத்துக்கு+ அவர் மத்தியஸ்தராகவும்+ இருக்கிறார். இந்த ஒப்பந்தம் முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைவிட மேலான வாக்குறுதிகளின் அடிப்படையில் சட்டப்படி செய்யப்பட்டுள்ளது.+  முதலாம் ஒப்பந்தம் குறையில்லாததாக இருந்திருந்தால், இரண்டாம் ஒப்பந்தத்துக்கு அவசியமே இருந்திருக்காது.+  ஆனால், கடவுள் தன் மக்களுடைய குறையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்: “‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்’ என்று யெகோவா* சொல்கிறார்.  ‘அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது+ செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதையே நான் விட்டுவிட்டேன்’ என்றும் யெகோவா* சொல்கிறார். 10  ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான்’ என்று யெகோவா* சொல்கிறார். ‘நான் அவர்களுடைய மனதில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+ 11  அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சக குடிமகனிடமோ தங்கள் சகோதரனிடமோ, “யெகோவாவை* பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். 12  அவர்களுடைய அநீதியான செயல்களை இரக்கத்தோடு நான் மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்றும் அவர் சொல்கிறார்.”+ 13  “புதிய ஒப்பந்தம்” என்று அவர் சொல்லும்போது, முந்தின ஒப்பந்தத்தை நீக்கிவிட்டார்+ என்று அர்த்தமாகிறது; அப்படி நீக்கப்பட்ட, பழையதாகிக்கொண்டிருக்கிற அந்த ஒப்பந்தம் சீக்கிரத்தில் மறையப்போகிறது.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “தொண்டு.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா