ஏசாயா 44:1-28

44  “என் ஊழியனான யாக்கோபே, இதைக் கேள்.நான் தேர்ந்தெடுத்த இஸ்ரவேலே,+ இதைக் கவனி.   யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே.   தாகமாக இருக்கிறவனுக்கு* நான் தண்ணீர் கொடுப்பேன்.+வறண்ட நிலத்தில் நீரோடைகளைப் பாய வைப்பேன். உன் சந்ததிக்கு என் சக்தியைக் கொடுப்பேன்.+உன் வம்சத்தை ஆசீர்வதிப்பேன்.   அவர்கள் பசும்புல்லைப் போலவும்,+நீரோடைகளுக்குப் பக்கத்தில் இருக்கிற காட்டரசு மரங்களைப் போலவும் செழித்து வளருவார்கள்.   அவர்களில் ஒருவன், “நான் யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று சொல்வான்.+ இன்னொருவன் யாக்கோபின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.மற்றொருவன், “யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று கையில் எழுதிக்கொள்வான். இஸ்ரவேலின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.’   பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+   என்னைப் போல் யாராவது இருக்கிறார்களா?+ அப்படி இருந்தால் தைரியமாகச் சொல்லட்டும், நிரூபித்துக் காட்டட்டும்.+ எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லட்டும்.இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் சொல்லட்டும். பூர்வ காலத்து ஜனங்களைத் தேர்ந்தெடுத்த சமயத்திலிருந்து நான் அப்படித்தானே சொல்லி வந்திருக்கிறேன்.   நீங்கள் கதிகலங்க வேண்டாம்.பயத்தில் உறைந்து போகவும் வேண்டாம்.+ நீங்களே என் சாட்சிகள்.+ இதை உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் முன்பே சொல்லவில்லையா, அறிவிக்கவில்லையா? என்னைத் தவிர வேறு கடவுள் உண்டா? உங்களைப் பாதுகாக்கும் கற்பாறை வேறு யாரும் இல்லை;+ எனக்குத் தெரிந்த வரைக்கும் யாருமே இல்லை.’”   சிலைகளைச் செதுக்கி வைக்கிறவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.அவர்கள் நேசிக்கிற அந்தச் சிலைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.+ அவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கிற அந்தச் சிலைகளால் எதையுமே பார்க்கவும் முடியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.+அந்தச் சிலைகளைச் செய்கிறவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+ 10  எந்த உதவியும் செய்ய முடியாத தெய்வத்தையோ உலோகச் சிலையையோயாராவது உண்டாக்குவார்களா?+ 11  சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+ உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான். அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும். அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள். 12  இரும்பு வேலை செய்கிறவன் இரும்பைத் தணல்மேல் வைத்து நன்றாகச் சூடாக்குகிறான். பின்பு சுத்தியலை எடுத்து, தன்னுடைய பலமான கைகளால் அதை ஓங்கி அடித்து,அதற்கு வடிவம் கொடுக்கிறான்.+ அதன்பின் பசியில் களைத்துப்போகிறான்.தண்ணீர் குடிக்காமல் சோர்ந்துபோகிறான். 13  மர ஆசாரி அளவுநூலால் மரத்தை அளந்து, சிவப்பு சுண்ணாம்புக்கட்டியால் அதில் உருவத்தை வரைகிறான். உளியால் அதைச் செதுக்குகிறான்; வட்டம்போடுகிற கருவியால் வளைவுகளை வரைகிறான். ஓர் அழகான சிலையைச் செய்கிறான்.அதை மனுஷ உருவத்தில் செய்கிறான்.+பின்பு, கோயிலில் நிறுத்தி வைக்கிறான்.+ 14  தேவதாரு மரங்களை வெட்டுகிற வேலை செய்கிறவன், காட்டிலே ஒரு கருவாலி மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.அதை நன்றாக வளர விடுகிறான்.+ அவன் ஒரு புன்னை மரத்தை நடுகிறான், மழை அதை வளர வைக்கிறது. 15  பின்பு, அதை ஒருவன் விறகாகப் பயன்படுத்துகிறான். அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து நெருப்பு மூட்டி குளிர்காய்கிறான்.இன்னும் கொஞ்சத்தை எடுத்து ரொட்டி சுடுகிறான். பின்பு, அதே மரத்தால் ஒரு தெய்வத்தையும் செய்து கும்பிடுகிறான். அதை வைத்து ஒரு சிலையைச் செதுக்கி அதன்முன் தலைவணங்குகிறான்.+ 16  மரத்தில் ஒரு பாதியை எடுத்து அடுப்பு எரிக்கிறான்.அதில் இறைச்சியைச் சுட்டு திருப்தியாகச் சாப்பிடுகிறான். அந்த நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து, “ஆஹா! நெருப்பில் குளிர்காய்வது எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று சொல்கிறான். 17  மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு சிலையைச் செதுக்குகிறான். அதன் முன்னால் விழுந்து வணங்குகிறான். அந்தச் சிலையைப் பார்த்து, “நீதான் என் தெய்வம், என்னைக் காப்பாற்று” என்று வேண்டுகிறான்.+ 18  இப்படிப்பட்டவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை, ஒன்றும் புரிவதில்லை.+ஏனென்றால், அவர்களுடைய கண்கள் அடைக்கப்பட்டிருக்கிறது; அவர்களால் பார்க்க முடிவதில்லை.அவர்களுடைய உள்ளத்தால் எதையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. 19  “மரத்தில் ஒரு பாதியை எடுத்து நான் நெருப்பு மூட்டினேன்.அந்த நெருப்புத் தணலில் ரொட்டியையும் கறியையும் சுட்டு சாப்பிட்டேன். அந்த மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு அருவருப்பான சிலையை நான் செய்யலாமா?+ஒரு மரத் துண்டை நான் கும்பிடலாமா?” என்று அவன் யோசிப்பது இல்லை. அந்தளவுக்குக்கூட அவனுக்கு அறிவோ புத்தியோ* இல்லை. 20  அவன் சாம்பலைத் தின்கிறான். ஏமாந்துபோன அவனுடைய உள்ளம் அவனைத் தவறான வழிக்குக் கொண்டுபோகிறது. அவனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. “பொய்யும் போலியுமான ஒன்றைக் கையில் வைத்திருக்கிறேனே” என்று அவன் நினைப்பதில்லை. 21  “யாக்கோபே, இஸ்ரவேலே, இதையெல்லாம் யோசித்துப் பார்.ஏனென்றால், நீ என் ஊழியன். நான் உன்னை உருவாக்கினேன், நீ என் ஊழியன்.+ இஸ்ரவேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.+ 22  நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+ 23  வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+ 24  யெகோவா உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கியவர், உன்னை விடுவிக்கிறவர்.+அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, எல்லாவற்றையும் நான் படைத்தேன். நானாகவே வானத்தை விரித்தேன்.+பூமியையும் உண்டாக்கினேன்.+ அப்போது என்னோடு யாராவது இருந்தார்களா? 25  வெட்டியாகப் பேசுபவர்கள்* சொல்லும் அடையாளங்களை நான் பலிக்காமல் போகச் செய்கிறேன்.குறிசொல்கிறவர்களை முட்டாள்கள் போல ஆக்குகிறேன்.+ஞானிகளைக் குழம்பிப்போக வைக்கிறேன்.அவர்களுடைய அறிவை முட்டாள்தனமாக ஆக்குகிறேன்.+ 26  என் ஊழியன் சொல்வதெல்லாம் நடக்கும்படி செய்கிறேன்.என் தூதுவர்கள் முன்னறிவிக்கிற எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறேன்.+‘எருசலேமில் ஜனங்கள் குடியிருப்பார்கள்’+ என்றும், ‘யூதாவிலுள்ள நகரங்கள் திரும்பக் கட்டப்படும்,+அங்கே இடிந்து கிடப்பதையெல்லாம் சரிசெய்வேன்’+ என்றும் சொல்கிறேன். 27  ஆழமான தண்ணீரைப் பார்த்து, ‘வற்றிப்போ’ என்றும்,‘உன்னுடைய ஆறுகளையெல்லாம் நான் காய்ந்துபோகச் செய்வேன்’+ என்றும் சொல்கிறேன். 28  ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.”

அடிக்குறிப்புகள்

இந்தப் பெயரின் அர்த்தம், “நேர்மையானவன்”; இது இஸ்ரவேலின் கௌரவப் பட்டம்.
வே.வா., “வறண்ட பூமிக்கு.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனோ.”
வே.வா., “பொய்த் தீர்க்கதரிசிகள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா