ஓசியா 12:1-14

12  “எப்பிராயீம் காற்றை நம்புகிறான். கிழக்கிலிருந்து அடிக்கும் காற்றைப் பிடிக்க நாள் முழுக்க ஓடுகிறான். அவனுடைய பொய்யும் வன்முறையும் பெருகிவிட்டன. அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்,+ எகிப்துக்கு எண்ணெயைக் கொண்டுபோகிறான்.+   யூதாவோடு யெகோவா வழக்காடுவார்.+கெட்ட வழியில் போனதற்காக யாக்கோபைத் தண்டிப்பார்.கெட்ட காரியங்கள் செய்ததற்காக அவனைப் பழிவாங்குவார்.+   தாயின் வயிற்றில் அவன் தன்னுடைய சகோதரனின் குதிங்காலைப் பிடித்தான்.+தன்னுடைய பலத்தால் கடவுளோடு போராடினான்.+   ஒரு தேவதூதனோடு தொடர்ந்து போராடி ஜெயித்தான். கருணை காட்டும்படி அழுது கெஞ்சினான்.”+ பெத்தேலில் கடவுள் அவனைப் பார்த்தார், அங்கே அவர் நம்மோடு பேசினார்.+   அவர் பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா.+யெகோவா என்ற பெயரிலேயே அவரை எல்லாரும் நினைத்துப் பார்ப்பார்கள்.+   “அதனால் உங்கள் கடவுளிடம் திரும்புங்கள்.+விசுவாசமாக இருங்கள்,* நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்.+எப்போதும் உங்கள் கடவுளை நம்புங்கள்.   வியாபாரி கள்ளத் தராசு வைத்திருக்கிறான்.அவன் ஏமாற்றவே விரும்புகிறான்.+   எப்பிராயீம், ‘நான் பணக்காரனாகிவிட்டேன்;+சொத்துகளைச் சேர்த்துவிட்டேன்.+ என் உழைப்பில் எந்தக் குற்றமோ பாவமோ கண்டுபிடிக்க முடியாது’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான்.   நீங்கள் எகிப்தில் இருந்த நாள்முதல் யெகோவாவாகிய நான்தான் உங்கள் கடவுள்.+ குறிக்கப்பட்ட* காலத்தில் உங்களைக் கூடாரங்களில் தங்க வைத்தேன்.திரும்பவும் கூடாரங்களில் தங்க வைப்பேன். 10  நான் தீர்க்கதரிசிகளிடம் பேசினேன்.+நிறைய தரிசனங்களை அவர்களுக்குக் காட்டினேன்.அவர்கள் மூலம் உவமைகளால் பேசினேன். 11  கீலேயாத்தில் பொய்யும் புரட்டுமே* மலிந்து கிடக்கிறது.+ கில்காலில் ஜனங்கள் காளைகளைப் பலி கொடுத்தார்கள்.+வயலின் சால்களில்* கிடக்கும் கற்கள்போல் அவர்களுடைய பலிபீடங்கள் இருக்கின்றன.+ 12  யாக்கோபு அராமுக்கு* ஓடிப்போனான்.+ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்ய இஸ்ரவேல்+ அங்கே வேலை செய்தான்.+அவளுக்காக ஆடுகளை மேய்த்தான்.+ 13  ஒரு தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேலை எகிப்திலிருந்து யெகோவா கூட்டிக்கொண்டு வந்தார்.+அவர் மூலம் அவனைப் பாதுகாத்தார்.+ 14  எப்பிராயீம் கடவுளுக்குக் கடும் கோபம் மூட்டினான்.+அவன்மேல் கொலைப்பழி* இருக்கிறது.அவனுடைய எஜமானின் பெயருக்கு அவன் களங்கம் ஏற்படுத்தியதால் அவர் பழிவாங்குவார்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மாறாத அன்பைக் காட்டுங்கள்.”
அல்லது, “பண்டிகை.”
வே.வா., “மாயமந்திரமுமே.”
சால்கள் என்பது உழும்போது நிலத்தில் ஏற்படும் பள்ளங்கள்.
அதாவது, “சீரியாவுக்கு.”
வே.வா., “இரத்தப்பழி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா