சங்கீதம் 110:1-7

தாவீதின் சங்கீதம். 110  யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்.   யெகோவா சீயோனிலிருந்து உங்கள்* வல்லமையின் செங்கோலை நீட்டி, “உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய்”+ என்று சொல்வார்.   நீங்கள் உங்களுடைய படைபலத்தைத் திரட்டும் நாளில்,* உங்களுடைய மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள்.பரிசுத்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வாலிபர்கள்* உங்களிடம் திரண்டு வருவார்கள். அவர்கள் விடியற்கால* பனித்துளி போன்றவர்கள்.   “மெல்கிசேதேக்கைப் போலவே+ நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்”+ என்றுயெகோவா ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.*   யெகோவா உங்கள் வலது பக்கத்தில் இருப்பார்.+அவருடைய கோபத்தின் நாளில் ராஜாக்களை அவர் நொறுக்கிப்போடுவார்.+   அவர் எல்லா தேசங்களையும் தண்டிப்பார்.+எல்லா இடங்களையும் பிணங்களால் நிரப்புவார்.+ மாபெரும் தேசத்தின்* தலைவனை நொறுக்கிப்போடுவார்.   வழியில் ஓடுகிற நீரோடையிலிருந்து அவர்* தண்ணீர் குடிப்பார். அதன்பின், தலைநிமிர்ந்து நிற்பார்.

அடிக்குறிப்புகள்

வசனம் 1-ல் சொல்லப்பட்ட எஜமானைக் குறிக்கிறது.
வே.வா., “உங்கள் படை புறப்படும் நாளில்.”
வே.வா., “இளம் ஆண்கள்.”
நே.மொ., “விடியற்காலத்தின் கர்ப்பத்தில் பிறக்கும்.”
வே.வா., “அவர் வருத்தப்பட மாட்டார்.”
வே.வா., “முழு பூமிக்கும்.”
வசனம் 1-ல் சொல்லப்பட்ட எஜமானைக் குறிக்கிறது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா