நீதிமொழிகள் 12:1-28

12  புத்திமதியை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்.+ஆனால், கண்டிக்கப்படுவதை வெறுக்கிறவன் புத்தியில்லாமல் நடக்கிறான்.+   நல்லவன் யெகோவாவின் பிரியத்தை* சம்பாதிக்கிறான்.ஆனால், சதிகாரனை அவர் கண்டனம் செய்கிறார்.+   அக்கிரமம் செய்வதன் மூலம் ஒருவனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.+ஆனால், நீதிமானின் வேர் ஒருபோதும் பிடுங்கப்படாது.   திறமைசாலியான மனைவி தன்னுடைய கணவனுக்குக் கிரீடம்போல் இருக்கிறாள்.+ஆனால், வெட்கக்கேடாக நடக்கிற மனைவி அவனுக்கு எலும்புருக்கி நோய்போல் இருக்கிறாள்.+   நீதிமான்களின் யோசனைகள் நியாயமானவை.ஆனால், பொல்லாதவர்களின் ஆலோசனைகள் ஏமாற்றுபவை.   பொல்லாதவர்களுடைய வார்த்தைகள் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கின்றன.+ஆனால், நேர்மையானவர்களின் வாய் அவர்களைக் காப்பாற்றுகிறது.+   கெட்டவர்கள் வீழ்த்தப்படும்போது சுவடு தெரியாமல் போய்விடுவார்கள்.ஆனால், நீதிமான்களின் வீடு என்றென்றும் நிலைத்திருக்கும்.+   விவேகத்தோடு பேசுகிறவனை எல்லாரும் புகழ்வார்கள்.+ஆனால், கோணலான புத்தி* உள்ளவனை எல்லாரும் கேவலமாக நடத்துவார்கள்.+   சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்ந்துகொண்டு வீண் பெருமையடிக்கிற ஒருவனைவிட,வீண் பகட்டு இல்லாமல் வாழ்ந்துகொண்டு வேலைக்காரனை வைத்திருக்கிறவன் மேல்.+ 10  நீதிமான் தன் வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான்.+ஆனால், பொல்லாதவன் காட்டுகிற இரக்கம்கூட கொடூரமாகத்தான் இருக்கிறது. 11  தன்னுடைய நிலத்தில் பயிரிடுகிறவன் திருப்தியாகச் சாப்பிடுவான்.+ஆனால், வீணான காரியங்களுக்குப் பின்னால் போகிறவன் புத்தியில்லாதவன். 12  அக்கிரமக்காரர்கள் கொள்ளையடித்தவற்றைப் பார்த்துப் பொல்லாதவன் பொறாமைப்படுகிறான்.ஆனால், நீதிமான் நன்றாக வேரூன்றிய மரத்தைப் போல் கனி கொடுக்கிறான். 13  அக்கிரமக்காரன் தன்னுடைய பாவமுள்ள பேச்சினால் சிக்கிக்கொள்கிறான்.+ஆனால், நீதிமான் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான். 14  நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவன் அதன் பலனைப் பார்த்துத் திருப்தியடைகிறான்.+அவனுடைய கைகளின் உழைப்பு அவனுக்குப் பலன் தரும். 15  முட்டாள் தன்னுடைய பாதை சரி என்று நினைக்கிறான்.+ஆனால், ஞானமுள்ளவன் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறான்.+ 16  முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.+ஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான். 17  உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உள்ளதை உள்ளபடியே சொல்கிறான்.ஆனால், பொய் சாட்சி சொல்கிறவன் உண்மைக்கு மாறாகப் பேசுகிறான். 18  யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.+ 19  உண்மை பேசுகிற உதடுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ஆனால், பொய் பேசுகிற நாவு நொடிப்பொழுதுதான் இருக்கும்.+ 20  சதித்திட்டம் போடுகிறவர்களின் உள்ளத்தில் இருப்பது கள்ளத்தனம்.ஆனால், சமாதானத்துக்காகப் பாடுபடுகிறவர்களுக்குக் கிடைப்பது சந்தோஷம்.+ 21  நீதிமானுக்கு எந்தக் கெடுதலும் வராது.+ஆனால், பொல்லாதவனின் வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்திருக்கும்.+ 22  பொய் பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், உண்மையாக நடக்கிறவர்கள்மேல் பிரியமாக இருக்கிறார். 23  சாமர்த்தியசாலி தன் அறிவைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.ஆனால், முட்டாள் தன் உள்ளத்திலுள்ள முட்டாள்தனத்தை உளறிக்கொட்டிவிடுகிறான்.+ 24  கடினமாக உழைக்கும் கைகள் ஆட்சி செய்யும்.+ஆனால், சோம்பலான கைகள் அடிமை வேலைதான் செய்யும்.+ 25  கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும்.*+ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.+ 26  நீதிமான் தன்னுடைய மேய்ச்சல் நிலங்களைக் கவனமாகத் தேடுகிறான்.ஆனால், பொல்லாதவனின் பாதை அவனை வழிதவறிப்போக வைக்கிறது. 27  சோம்பேறி எதையும் வேட்டையாடிப் பிடிப்பது இல்லை.+ஆனால், கடின உழைப்பு ஒருவனுக்கு அருமையான பொக்கிஷமாக இருக்கிறது. 28  நீதியின் பாதை வாழ்வுக்கு வழிநடத்தும்.+அந்தப் பாதையில் மரணம் இல்லை.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அங்கீகாரத்தை.”
நே.மொ., “இதயம்.”
வே.வா., “அதே நாளில்.”
வே.வா., “ஒருவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா