மாற்கு எழுதியது 16:1-8

16  ஓய்வுநாள்+ முடிந்த பின்பு, மகதலேனா மரியாளும் யாக்கோபின் அம்மாவான மரியாளும்+ சலோமேயும், அவருடைய உடலில் பூசுவதற்காக நறுமணப் பொருள்களை வாங்கினார்கள்.+  அவர்கள் வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையிலேயே, சூரியன் உதயமான நேரத்திலேயே, கல்லறைக்கு* போனார்கள்.+  “கல்லறை வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் உருட்டிப் போடுவார்கள்?” என்று பேசிக்கொண்டார்கள்.  அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, அந்தக் கல் மிகப் பெரியதாக இருந்தபோதிலும், அது ஏற்கெனவே உருட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.+  அவர்கள் அந்தக் கல்லறைக்குள் நுழைந்தபோது, வெள்ளை அங்கி போட்டிருந்த ஓர் இளம் மனிதர் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.  அப்போது அவர், “அதிர்ச்சி அடையாதீர்கள்.+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட நாசரேத்தூர் இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை, அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+ இதோ! அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள்.+  இப்போது புறப்பட்டுப் போய் அவருடைய சீஷர்களிடமும் பேதுருவிடமும், ‘உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்,+ அவர் உங்களிடம் சொன்னது போலவே அங்கே அவரைப் பார்ப்பீர்கள்’ என்று சொல்லுங்கள்”+ என்றார்.  அவர்கள் நடுக்கத்தோடும், அதேசமயத்தில் பிரமிப்போடும் அந்தக் கல்லறையைவிட்டு ஓட்டமாக ஓடினார்கள். பயத்தில் அவர்கள் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நினைவுக் கல்லறைக்கு.”
நம்பகமான, ஆரம்பக் கால கையெழுத்துப் பிரதிகளின்படி, மாற்கு எழுதிய சுவிசேஷம் வசனம் 8-ல் உள்ள வார்த்தைகளுடன் முடிவடைகிறது. இணைப்பு A3-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா