யோபு 10:1-22

10  பின்பு அவர், “எனக்கு வாழ்க்கை கசக்கிறது.+ என் குறைகளை வாய்விட்டுச் சொல்லப்போகிறேன். என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கப்போகிறேன்.   நான் கடவுளிடம், ‘என்னைக் குற்றவாளி என்று சொல்லிவிடாதீர்கள். என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள் என்று முதலில் விளக்குங்கள்’ என்று சொல்வேன்.   அதோடு, ‘என்னைக் கொடுமைப்படுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்?நீங்கள் படைத்த மனுஷன்மேல்+ நீங்களே வெறுப்பைக் கொட்டுவதால் என்ன பிரயோஜனம்?கெட்டவர்களுடைய திட்டங்களை நீங்கள் ஆதரிக்கலாமா?   உங்களுடைய கண்கள் என்ன மனுஷக் கண்களா?சாதாரண மனுஷன் பார்ப்பது போலவா நீங்கள் பார்க்கிறீர்கள்?   உங்கள் வாழ்நாள் மனுஷனின் வாழ்நாளைப் போன்றதா?அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவு காலம்தான் நீங்களும் வாழ்கிறீர்களா?+   பின்பு ஏன் என்னிடம் குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கிறீர்கள்?நான் பாவம் செய்கிறேனா என்று ஏன் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்?+   நான் குற்றம் செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமே.+யாராலும் என்னை உங்கள் கையிலிருந்து காப்பாற்ற முடியாதே.+   உங்கள் கைகளால்தானே என்னைப் பார்த்துப் பார்த்து உண்டாக்கினீர்கள்?+இப்போது ஏன் என்னை அடியோடு அழிக்கப் பார்க்கிறீர்கள்?   என்னை மண்ணால் உருவாக்கியதைத் தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.+இப்போது என்னை மண்ணுக்கே அனுப்ப நினைக்கிறீர்களே!+ 10  என் தாயின் வயிற்றுக்குள் நீங்கள் என்னை வைக்கவில்லையா?*அங்கே எனக்கு உருவம் கொடுக்கவில்லையா?* 11  எலும்புகளாலும் தசைநாண்களாலும் எனக்கு வடிவம் கொடுத்தீர்களே.தோலாலும் சதையாலும் என்னைப் போர்த்தினீர்களே.+ 12  எனக்கு வாழ்வு தந்து, மாறாத அன்பைக் காட்டினீர்களே.என் உயிரை* பொத்திப் பொத்திப் பாதுகாத்தீர்களே.+ 13  ஆனாலும், எனக்குக் கஷ்டங்களைக் கொடுக்க ரகசியமாகத் திட்டம் போட்டீர்கள். இந்த எல்லா கஷ்டங்களையும் கொடுத்தது நீங்கள்தான் என்று எனக்குத் தெரியும். 14  நான் பாவம் செய்தால், நீங்கள் கவனிக்காமல் இருக்க மாட்டீர்கள்.+என் குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட மாட்டீர்கள். 15  நான் குற்றவாளி என்றால், ஒழிந்துபோகிறேன்! நான் நிரபராதி என்றாலும், என்னால் தலைநிமிர முடியவில்லை.+ரொம்பவே அசிங்கப்பட்டுவிட்டேன், நொந்துபோய்விட்டேன்.+ 16  நான் தலைநிமிர்ந்தாலும், சிங்கத்தை வேட்டையாடுவதுபோல் என்னை வேட்டையாடுகிறீர்கள்.+உங்கள் பலத்தை மறுபடியும் என்மேல் காட்டுகிறீர்கள். 17  எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிறைய பேரைக் கொண்டுவருகிறீர்கள்.என்மேல் இன்னும் அதிகமாகக் கோபத்தைக் கொட்டுகிறீர்கள்.எனக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வருகிறது. 18  என் தாயின் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளியே கொண்டுவந்தீர்கள்?+ யாரும் பார்ப்பதற்கு முன்பே நான் செத்துப்போயிருக்கக் கூடாதா? 19  இப்படிப்பட்ட ஒருவன் இல்லாமலே போயிருப்பானே!நான் கருவறையிலிருந்து நேராகக் கல்லறைக்குப் போயிருப்பேனே’ என்று கடவுளிடம் சொல்வேன். 20  இன்னும் கொஞ்ச நாள்தானே வாழப்போகிறேன்?+ அவர் என்னை விட்டுவிடக் கூடாதா?கொஞ்ச நேரமாவது அவர் என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன்.*+ 21  அதன் பிறகு, இருட்டிலும் இருட்டான* இடத்துக்குப்+ போய்விடுகிறேன்.அங்கிருந்து திரும்பிவர மாட்டேன்.+ 22  அது பயங்கர இருட்டான ஒரு தேசம்.கும்மிருட்டும் குழப்பமும் நிறைந்த தேசம்.அங்கே வெளிச்சம்கூட இருட்டாகத்தான் தெரியும்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நீங்கள் என்னைப் பால் போல ஊற்றவில்லையா?”
நே.மொ., “பாலாடைக் கட்டி போல உறைய வைக்கவில்லையா?”
வே.வா., “உயிர்மூச்சை.”
வே.வா., “கொஞ்சம் சந்தோஷப்படுவேன்.”
வே.வா., “இருட்டும் சாவின் நிழலும் உள்ள.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா