யோபு 26:1-14

26  அதற்கு யோபு,   “சோர்ந்துபோனவனுக்கு ரொம்பவே உதவி செய்துவிட்டீர்கள்! சக்தி இல்லாமல் கிடந்தவனை நன்றாகவே தூக்கி நிறுத்திவிட்டீர்கள்!+   புத்தி* இல்லாதவனுக்குப் பெரிதாகப் புத்தி சொல்லிவிட்டீர்கள்!+ நீங்கள் பெரிய ஞானி என்று காட்டிவிட்டீர்கள்!   யாரைப் பார்த்துப் பேசுகிறீர்கள்?இப்படியெல்லாம் பேச யார் உங்களைத் தூண்டிவிட்டது?   செத்துக் கிடக்கிறவர்கள்* கடவுளுக்கு முன்னால் நடுங்குகிறார்கள்.அவர்கள் கடலையும் கடல் பிராணிகளையும்விட கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்.   கல்லறை அவர்முன் திறந்தே இருக்கிறது.+புதைகுழி மூடப்படாமல் கிடக்கிறது.   வெறுமையான இடத்தில் அவர் வானத்தை* விரித்தார்.+பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்.   மேகத்தில் தண்ணீரைக் கட்டி வைக்கிறார்.+அதன் எடையால் மேகம் கிழிவதில்லை.   அவருடைய சிம்மாசனத்தை மறைக்கிறார்.மேகத்தால் அதை மூடுகிறார்.+ 10  கடலும் வானமும் தொடுவதுபோல் ஒரு எல்லைக்கோட்டைப் போட்டிருக்கிறார்.+வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். 11  வானத்தின் தூண்கள் அதிர்கின்றன.அவர் அதட்டும்போது அவை நடுங்குகின்றன. 12  அவருடைய சக்தியால் கடலைக் கொந்தளிக்க வைக்கிறார்.+அவருடைய புத்தியால்* ராட்சதக் கடல் பிராணியை* நொறுக்குகிறார்.+ 13  வானத்திலுள்ள மேகங்களை அவருடைய மூச்சுக்காற்றால்* கலைக்கிறார்.நழுவி* செல்லும் பாம்பை அவருடைய கையால் குத்திக் கொல்கிறார். 14  இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!+அவரைப் பற்றி நம் காதில் விழுந்திருப்பதெல்லாம் ரொம்பவே லேசான சத்தம்தான்! அப்படியிருக்கும்போது, அவர் உண்டாக்குகிற மாபெரும் இடிமுழக்கத்தை யார்தான் புரிந்துகொள்ள முடியும்?”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஞானம்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்கள்.”
நே.மொ., “வடக்குப் பகுதியை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலால்.”
நே.மொ., “ராகாபை.”
வே.வா., “அவருடைய காற்றை அனுப்பி.”
வே.வா, “நெளிந்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா