Skip to content

யாருடைய கைவண்ணம்?

இயற்கையின் அதிசயங்கள்

கலையாத கலைவண்ணம்​—யாருடைய கைவண்ணம்?

உயிரினங்களில் கலையாத கலைவண்ணங்களையும் கலைத்திறன்களையும் நம்மால் பார்க்க முடியும்.

சக்தியின் ரகசியம் தெரிந்த கில்லாடிகள்!—யாருடைய கைவண்ணம்?

உயிரினங்களுக்கு இருக்கும் சக்தியை சிறப்பாக பயன்படுத்தும் திறமை, உயிர் உருவானதை பற்றி என்ன சொல்கிறது?

ஜொலிக்கும் ஜீவன்கள்​—யாருடைய கைவண்ணம்?

நிறைய உயிரினங்கள் மின்சாரமே இல்லாமல் மின்னுகின்றன. அதுவும், மனிதர்கள் உருவாக்கிய எந்த பல்பையும்விட குறைவான சக்தியைப் பயன்படுத்தி!! இந்த அதிசயம் எப்படி நடக்கிறது?

மனித உடல்

ஆக்ஸிஜனின் பயணம் ​—யாருடைய கைவண்ணம்?

நம் உடலுக்குள் ஆக்ஸிஜன் எப்படி போகிறது, எங்கே போகிறது, என்னவெல்லாம் செய்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். அசந்துபோவீர்கள்!

காயம் ஆறும் மாயம்

காயம் ஆறும் விதத்தை காப்பியடித்து விஞ்ஞானிகள் எப்படி ப்ளாஸ்டிக் பொருள்களை தயாரிக்க முயற்சி செய்கிறார்கள்?

நிலத்தில் வாழும் மிருகங்கள்

யானையின் தும்பிக்கை—யாருடைய கைவண்ணம்?

யானையின் வளைந்துகொடுக்கும் திறமையைப் பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்துபோகிறார்கள். அதன் சிக்கலான கட்டமைப்புக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆர்க்டிக் தரை அணிலின் அபார மூளை​—யாருடைய கைவண்ணம்?

பனிக்கால உறக்கத்துக்குப் பிறகு இந்த அணிலின் மூளை எப்படித் தன்னைத் தானே சரிசெய்துகொள்கிறது என்று பாருங்கள்.

கடல் நீர்நாயின் ரோமம்

கடலில் வாழும் சில பாலூட்டிகளுக்கு அவற்றின் தோலுக்குக் கீழ் தடிமனான கொழுப்பு இருக்கும். அவற்றின் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்ள இதுதான் உதவுகிறது. ஆனால், கடல் நீர்நாயின் உடல் கதகதப்பாக இருக்க வேறொன்று உதவுகிறது.

பூனையின் நாக்கு​—யாருடைய கைவண்ணம்?

தூங்காமல் இருக்கும் நேரத்தில், கால்வாசி நேரத்தை தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்கே பூனைகள் செலவு செய்கின்றன. பூனை எப்படித் தன்னை இவ்வளவு சுத்தமாக வைத்துகொள்கிறது?

பூனையின் மீசை

‘ஈ-விஸ்கர்ஸ்’ என்ற சென்சார்கள் பொருத்திய ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் ஏன் தயாரிக்கிறார்கள்?

நாயின் மோப்ப சக்தி—யாருடைய கைவண்ணம்?

விஞ்ஞானிகள் காப்பியடிக்கும் அளவுக்கு நாயின் மோப்ப சக்தியில் என்ன இருக்கிறது?

குதிரையின் கால்கள்

இன்ஜினியர்களால ஏன் இதே மாதிரி செய்ய முடியல?

நீரில் வாழும் உயிரினங்கள்

சுறாவின் தோல் ​—யாருடைய கைவண்ணம்?

சுறாமீனுடைய தோலின் வடிவம், அதை ஒட்டுண்ணிகளிடமிருந்து எப்படி பாதுகாக்கிறது?

பைலட் திமிங்கலத்தின் தோல்—யாருடைய கைவண்ணம்?

இந்தத் தனித்துவம் வாய்ந்த திறமைகள் கப்பல் போக்குவரத்து கம்பெனிகளை ஏன் கவர்கிறது?

டால்பின்களின் சோனார் திறன்—யாருடைய கைவண்ணம்?

தங்களைச் சுற்றி என்ன இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அதிசயத் திறன் டால்பின்களுக்கு இருக்கிறது. இந்தத் திறனைக் காப்பியடித்து புதிய கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.

ஹாக்மீனின் வழுவழுப்பான திரவம்​—யாருடைய கைவண்ணம்?

உண்ணவரும் விலங்குகளை வெறுப்படைய செய்தாலும், இந்த ஹாக்மீன் விஞ்ஞானிகளை வியப்படைய செய்கிறது. ஏன் தெரியுமா?

கடல் வெள்ளரியின் தோல்—ஓர் அதிசயம்!

இந்தக் கடல்வாழ் பிராணியால், சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னுடைய தோலை எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது?

முட்டையிட சாகச பயணம் செய்யும் க்ரூனியன் மீன்கள்​—யாருடைய கைவண்ணம்?

சரியான நேரத்திலும் சரியான முறையிலும் முட்டையிடுவதால் எப்படி அதன் குஞ்சுகள் உயிர் பிழைக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பார்னக்கிள் சிப்பியின் பசை

செயற்கையாக உருவாக்கப்படுகிற பசையைவிட பார்னக்கிள் சிப்பியின் பசை ரொம்பவே உறுதியானது. ஈரமான இடத்திலும் இவை எப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது புரியா புதிராகவே இருந்தது. ஆனால், சமீபத்தில் இதைப் பற்றிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கிளிஞ்சல்களின் வடிவம்

கிளிஞ்சல்களுடைய வடிவமும் அமைப்பும்தான் கிளிஞ்சல்களுக்குள் வாழும் மெல்லுடலிகளுடைய பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கின்றன.

ஆக்டோபஸின் அதிசயக் கைகள்—யாருடைய கைவண்ணம்?

ஆக்டோபஸின் கைகளைப் பார்த்து, அற்புதத் திறமைகளைக் கொண்ட ரோபோ கைகளை நிபுணர்கள் தயாரித்திருக்கிறார்கள்.

கடல்குதிரையின் வால்—யாருடைய கைவண்ணம்?

கடல்குதிரையின் வால் எப்படி நவீன ரோபோக்களைத் தயாரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பறவைகள்

வெளுக்காமல் வெளுத்துக்கட்டும் பறவைகளின் நிறங்கள்

ஒருபோதும் வெளுக்காத பறவைகளின் சிறகுகளைக் காப்பியடித்து தரமான பெயின்ட்டுகளையும் துணிமணிகளையும் மனிதர்களால் உருவாக்க முடியும். எப்படி?

கமுக்கமாகப் பறக்கும் ஆந்தைகள்—யாருடைய கைவண்ணம்?

ஆந்தையின் இறக்கைகளுடைய அட்டகாசமான வடிவமைப்பைக் காப்பியடித்து சத்தமில்லாமல் சுற்றும் காற்றாலைகளைத் தயாரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

பறவையோட இறக்கை ஓர் அதிசயம்

இந்த டிஸைனை காப்பியடிச்சு விமானத்தோட இறக்கை முனையை உருவாக்கினதுனால ஒரு வருஷத்துல மட்டும் 760 கோடி லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்த முடிஞ்சது.

எம்பரர் பென்குவினின் இணையில்லா இறக்கை

இந்தப் பறவையின் இறக்கையைப் பற்றி கடல் உயிரியலாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

மண்ணில் வித்தை காட்டும் மேலீ பறவை​—யாருடைய கைவண்ணம்?

கதகதப்பான இடத்தில் முட்டைகள் இருப்பதற்காக மணல் மேட்டை உருவாக்குகிறது இந்த பறவை. பருவ காலங்கள் மாறினாலும் கூட்டின் தட்பவெப்ப நிலையை வருஷம் முழுவதும் மாறாமல் காத்துக்கொள்கிறது. எப்படி?

ஊரும் பிராணிகள் மற்றும் நில நீர்வாழ் உயிரினங்கள்

அகாமா பல்லியின் வால்!

தரையிலிருந்து செங்குத்தான சுவர்மீது இந்தப் பல்லியால் எப்படித் தாவி குதிக்க முடிகிறது?

முதலை வாய்

சிங்கம், புலியைவிட மூன்று மடங்கு அதிக வலிமையுடன் கடிக்கும். மனிதர்களின் விரல் நுனிகளில் இருக்கும் தொடு உணர்வைவிட முதலையின் வாயிலும் தாடையிலும் தொடு உணர்வு அதிகமாக இருக்கும். எப்படி?

பாம்பு தோல்

பாம்புகள் சொரசொரப்பான மரங்கள்மீது ஏறவும் மண்ணுக்குள் லாவகமாகப் புதைந்துகொள்ளவும் முடியும். அப்படியென்றால், பாம்பின் தோல் எப்படி அவ்வளவு உறுதியாக இருக்கிறது?

தவளையும் தன் வாயால் கூடும்—ஜப்பானிய மரத் தவளை​—யாருடைய கைவண்ணம்?

பெண் தவளைகளைக் கவருவதற்காக ஜப்பானிய ஆண் மரத் தவளைகள் சத்தம் போடும் விதத்தில் என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது?

பூச்சிகள்

பம்பிள் தேனீயின் பறக்கும் திறன்—யாருடைய கைவண்ணம்?

இந்த தேனீயால் எப்படி அனுபவமுள்ள விமானிகளைவிட திறமையாக பறக்க முடிகிறது?

மலர்மீது தேனீ கால்பதிக்கும் விதம்

பறக்கும் ரோபோக்களின் தரையிறங்கும் தொழில்நுட்பத்தை [உருவாக்க] இது எப்படி உதவியாக இருக்கிறது?

தேன்கூடு

கிடைக்கிற இடத்தை முழுசா பயன்படுத்தி தேனீக்கள் அழகான தேன்கூட்டை கட்டுது. 1999 வரைக்கும் இந்த டிஸைன்ல இருக்கிற தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகளால விளக்கவே முடியலை.

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்கும் எறும்புகள்

எறும்புகள் நெரிசலைத் தவிர்க்கின்றன. அதன் ரகசியம் என்ன?

எறும்பின் கழுத்து

தன் எடையைவிட பல மடங்கு அதிகமான எடையை எறும்பு எப்படி சுமக்கிறது?

கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்யும் விதம் ஓர் அற்புதம்!

உயிர் வாழ இந்தச் சின்னப் பூச்சி தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். இந்த முக்கியமான வேலையை இந்தப் பூச்சி எப்படிச் செய்கிறது?

வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்

இந்த எறும்பு மிக அதிகமான வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் உயிரினங்களில் ஒன்று. இந்த எறும்பினால் எப்படி மிகக் கடுமையான வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடிகிறது?

மோனார்க் பட்டாம்பூச்சியின் பயணம்​—யாருடைய கைவண்ணம்?

ரொம்பச் சிக்கலான இடப்பெயர்ச்சியை செய்யும் மோனார்க் பட்டாம்பூச்சி தானாகவே வந்திருக்குமா?

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

பட்டாம்பூச்சியின் சிறகுகள் கருப்பாக இருப்பதால் மட்டுமே ஒளி சேகரிப்பதில்லை.

கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சியின் சிறகுகள்—யாருடைய கைவண்ணம்?

சோலார் பேனல்களின் ஆற்றலை அதிகமாக்க என்ன செய்யலாம் என்பதை கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சியிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொண்டார்கள்.

விமானத்தை விஞ்சும் ஈ!

பழ ஈ, போருக்குப் பயன்படுத்தப்படும் ஜெட் விமானத்தைப் போல எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்புகிறது, அதுவும் ஒரு கனநொடிக்குள்!

செடிகள்

போலியா பெர்ரியின் கண்ணைப் பறிக்கும் நீல நிறம்

இந்தப் பழத்தில் நீல நிறமி இல்லையென்றாலும், இது ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கிறது. இது போன்ற நீல நிறம் வேறெந்த செடியிலும் இல்லை. அப்படியென்றால், கண்ணைப் பறிக்கும் நீல நிறத்தின் ரகசியம் என்ன?

நுண்ணுயிரிகளின் உலகம்

ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்—டிஎன்ஏ

டிஎன்ஏ, “ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்