Skip to content

இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதராகத்தான் இருந்தாரா?

இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதராகத்தான் இருந்தாரா?

பைபிள் தரும் பதில்

 இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதராக மட்டுமே இருக்கவில்லை. மனித சரித்திரத்திலேயே மிகவும் செல்வாக்கு செலுத்திய மனிதராகவும் இருந்திருக்கிறார். பிரபல சரித்திராசிரியர்களும் எழுத்தாளர்களும் அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்:

 “நாசரேத்தூர் இயேசு . . . ஒரு சரித்திர நாயகர் என்பதில் சந்தேகமே இல்லை.”—எச். ஜி. வெல்ஸ், ஆங்கில சரித்திராசிரியர்.

 “இந்தக் கிரகத்தில் வாழ்ந்த நபர்களின் வாழ்க்கை வரலாற்றிலேயே [இயேசுவின்] வாழ்க்கை வரலாறுதான் மிகமிக செல்வாக்குள்ளது; அதன் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.”—கென்னத் ஸ்காட் லட்டூரெட், அமெரிக்க சரித்திராசிரியர் மற்றும் நூலாசிரியர்.

 இதுவரை வாழ்ந்த எத்தனையோ நல்ல மனிதர்களைவிட இயேசு மிகப் பெரியளவில் ஜனங்கள்மீது செல்வாக்கு செலுத்தியிருப்பதற்குக் காரணம் என்னவென்பதை பைபிள் வெளிப்படுத்தியிருக்கிறது. இயேசு தன்னை மிக நெருக்கமாகப் பின்பற்றிய சில நபர்களிடம் தான் யார் என்று சொல்லும்படி கேட்டபோது, அவர்களில் ஒருவர் மிகச் சரியாகவே, “நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்று சொன்னார்.—மத்தேயு 16:16.