Skip to content

யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்களா?

யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்களா?

 எங்களது உலக தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. என்றாலும், நாங்கள் ஒரு அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல என்பதற்கு பின்வரும் காரணங்களை கவனியுங்கள்:

  •   நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட மதத்திலிருந்து பிரிந்து வரும் ஒரு தொகுதியையே மதப்பிரிவு என்று சிலர் சொல்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எந்த மத தொகுதியிலிருந்தும் பிரிந்து வந்தவர்கள் அல்ல. மாறாக, முதல் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தை நாங்கள் மீண்டும் நிறுவியிருப்பதாக நம்புகிறோம்.

  •   யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் அதிகமான தேசங்களிலும் நாடுகளிலும் ஊழிய வேலையை மும்முரமாக செய்துகொண்டு வருகிறார்கள். நாங்கள் எங்கு வசித்தாலும் சரி எங்கள் பற்றுறுதி யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மட்டுமே, அமெரிக்க அரசாங்கத்திற்கோ வேறெந்த மனித அரசாங்கத்திற்கோ அல்ல.​—யோவான் 15:19; 17:15, 16.

  •   எங்களது அனைத்து போதனைகளும் பைபிள் அடிப்படையிலானவை, எந்த அமெரிக்க மத தலைவர்களின் கருத்துகளையும் சார்ந்தவை அல்ல.​—1 தெசலோனிக்கேயர் 2:13.

  •   நாங்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் எந்த மத தலைவர்களையும் அல்ல.​—மத்தேயு 23:8-10.