Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்தளிக்கும் உலகம்

3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

ஏன் முக்கியம்?

உலகத்தில் நெருக்கடி அதிகமாகும்போது மக்கள் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். அந்தக் கவலையிலேயே உறவுகளை மறந்துவிடுகிறார்கள்.

  • நண்பர்களோடு ஒட்டாமல் தங்களையே தனிமைப்படுத்திகொள்கிறார்கள்.

  • கணவன் மனைவிக்கு நடுவில் நிறைய சண்டைகள் வருகின்றன.

  • பிள்ளைகள் படும் கஷ்டங்களை அப்பா அம்மா கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • உடலும் மனதும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நண்பர்கள் தேவை. அதுவும், கஷ்டமான காலத்தில் ரொம்ப ரொம்பத் தேவை!

  • உலகத்தில் இருக்கும் நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த மன அழுத்தத்தால், எதிர்பார்க்காத பிரச்சினைகள் குடும்பத்தைத் தாக்கலாம்.

  • மனதைப் பாதிக்கும் செய்திகளைப் பிள்ளைகள் பார்த்தால், நாம் நினைப்பதைவிட அவர்கள் ரொம்பவே பயந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இதைச் செய்துபாருங்கள்

பைபிள் சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள், நல்ல அறிவுரைகளையும் கொடுப்பார்கள். அக்கறை காட்டுவதற்கு ஒருவர் இருந்தாலே தினம்தினம் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க பலம் கிடைக்கும்.