Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓர் அற்புதமான மூலப்பொருள்

ஓர் அற்புதமான மூலப்பொருள்

“கார்பனைவிட வாழ்க்கைக்கு முக்கியமான மூலப்பொருள் வேறு எதுவும் இல்லை” என்று இயற்கையின் கட்டுமான பொருள்கள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. ஒரு கார்பன் அணு மற்ற கார்பன் அணுக்களோடும் இன்னும் நிறைய மற்ற அணுக்களோடும் இணைந்து லட்சக்கணக்கான புதிய சேர்மங்களை உருவாக்கும் விசேஷத் தன்மை கார்பனுக்கு இருக்கிறது. இதில் பலவற்றை விஞ்ஞானிகள் இன்னும் கண்டிப்பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு காட்டப்பட்டிருக்கிறபடி, கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து பிரமிடுகள், ஷீட்டுகள், டியூபுகள், சங்கிலி தொடர்கள், வளையங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கும். கார்பன் உண்மையிலேயே ஒரு அற்புதமான மூலப்பொருள் என்றே நாம் சொல்லலாம். ▪ (g16-E No. 5)

வைரம்

கார்பன் அணுக்கள் பிரமிடு வடிவத்தில் ஒன்றிணைகிறது. இதற்கு ‘நான்முகி அமைப்பு’ (tetrahedrons) அதாவது, நான்கு பக்கங்கள் கொண்ட அமைப்பு என்று பெயர். இப்படி இணைவதால், அதிக உறுதியும் கடினமும் உள்ள ஒரு பொருள் கிடைக்கிறது. இயற்கையாகவே உருவாகும் இந்த பொருளைத்தான் நாம் வைரம் என்று சொல்கிறோம். ஒரு சிறந்த வைரம் என்பது கார்பன் அணுக்களின் ஒரே ஒரு மூலக்கூறால் ஆனது.

கிராஃபைட்

கார்பன் அணுக்கள் மிக நெருக்கமாக ஷீட்டுக்களின் வடிவத்தில் ஒன்றுக்குமேல் ஒன்று இணைக்கப்பட்டிருகிறது. ஆனால் அது நெருக்கமாக இல்லாமல் லேசாக அடுக்கப்படுகிறது. இதைத்தான் கிராஃபைட் என்று சொல்கிறோம். இந்த தன்மைகள் இருப்பதால் உராய்வை தடுக்கும் எண்ணெய்யைப் போல் கிராஃபைட் செயல்படுகிறது. அதோடு, ‘லெட் பென்சிலை’* தயாரிக்கவும் பயன்படுகிறது.

கிராஃபீன்

கார்பன் அணுக்கள் ஒரே அடுக்கில் அறுங்கோண வடிவத்தில் வலைப்பின்னலைப் போல் இணைக்கப்பட்டிருகிறது. கிராஃபீனுக்கு இருக்கும் வலையும் தன்மை ஸ்டீலைவிட பல மடங்கு அதிகமானது. பென்சிலால் போடப்பட்ட ஒரு கோட்டில், ஒரு அடுக்கிலோ பல அடுக்கிலோ சிறிதளவு கிராஃபீன் காணப்படும்.

ஃபுல்லிரீன்

கார்பனால் ஆன இந்த மூலக்கூறுகள் வித்தியாசமான வடிவங்களில் இணைக்கப்பட்டிருகிறது. இவை கண்ணுக்கு தெரியாத மிக சிறிய பந்துகளாலும் நானோடியூபுகள் என்று அழைக்கப்படும் டியூபுகளாலும் ஆனது. இது நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படுகிறது.

உயிரினங்கள்

செடிகள், மிருகங்கள், மனிதர்கள் எல்லாம் பல செல்களால் உருவாகி இருக்கின்றன. இந்த செல்களில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்களிலும் மற்றும் சில கொழுப்புகளும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் கார்பன் காணப்படுகிறது.

“காணமுடியாத [கடவுளுடைய] பண்புகள் . . . படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.”—ரோமர் 1:20.

ஜூலை 2007-ன் விழித்தெழு! பத்திரிகையில் “ஒரு பென்சில் கொடுங்களேன்” என்ற கட்டுரையை பாருங்கள்.