Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

நீதிமொழிகள்: அர்த்தம், “பொன்மொழிகள்.”

  • 1

    • நீதிமொழிகள் எழுதப்பட்டதற்கான காரணம் (1-7)

    • கெட்ட சகவாசத்தால் வரும் ஆபத்துகள் (8-19)

    • உண்மையான ஞானம் பொது இடங்களில் நின்று அழைக்கிறது (20-33)

  • 2

    • ஞானத்தின் மதிப்பு (1-22)

      • புதையல்களைத் தேடுவதுபோல் ஞானத்தைத் தேடு (4)

      • யோசிக்கும் திறன் பாதுகாப்பு தரும் (11)

      • ஒழுக்கக்கேடாக நடந்தால் அழிவுதான் வரும் (16-19)

  • 3

    • ஞானமாக நடந்து, யெகோவாவை நம்பு (1-12)

      • மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை மகிமைப்படுத்து (9)

    • ஞானம் சந்தோஷத்தைத் தரும் (13-18)

    • ஞானம் பாதுகாப்பைத் தரும் (19-26)

    • மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை (27-35)

      • மற்றவர்களுக்கு நல்லது செய்ய முடிந்தால் செய்ய வேண்டும் (27)

  • 4

    • அப்பாவின் ஞானமான அறிவுரைகள் (1-27)

      • எல்லாவற்றையும்விட ஞானத்தைச் சம்பாதி (7)

      • பொல்லாதவர்களின் பாதைகளை வெறுத்துவிடு (14, 15)

      • நீதிமான்களின் பாதை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது (18)

      • “உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்” (23)

  • 5

    • நடத்தைகெட்ட பெண்ணைப் பற்றிய எச்சரிக்கை (1-14)

    • உன் மனைவியோடு சந்தோஷமாக இரு (15-23)

  • 6

    • கடனுக்கு உத்தரவாதம் கொடுப்பதைக் குறித்து ஜாக்கிரதை (1-5)

    • “சோம்பேறியே, நீ போய் எறும்பைப் பார்” (6-11)

    • உதவாக்கரையாகவும் அயோக்கியனாகவும் இருப்பவன் (12-15)

    • யெகோவா வெறுக்கும் ஏழு காரியங்கள் (16-19)

    • நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள் (20-35)

  • 7

    • கடவுளுடைய கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்திடு (1-5)

    • விவரம் தெரியாத வாலிபன் மயக்கப்படுகிறான் (6-27)

      • “வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிற மாட்டைப் போல” (22)

  • 8

    • ஞானம் பேசுகிறது (1-36)

      • ‘நான் படைப்புகளிலேயே முதல் படைப்பு’ (22)

      • ‘கடவுளுக்குப் பக்கத்தில் கைதேர்ந்த கலைஞனாக இருந்தேன்’ (30)

      • ‘மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்’ (31)

  • 9

    • ஞானம் அழைக்கிறது (1-12)

      • “என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்” (11)

    • புத்தியில்லாத பெண் கூப்பிடுகிறாள் (13-18)

      • “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்” (17)

  • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

    • 10

      • ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான் (1)

      • சுறுசுறுப்பான கைகள் செல்வத்தைக் கொண்டுவரும் (4)

      • அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும் (19)

      • யெகோவாவின் ஆசீர்வாதம்தான் சொத்து (22)

      • யெகோவாவுக்குப் பயந்து நடப்பதால் ஆயுள் கூடும் (27)

    • 11

      • அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும் (2)

      • கடவுளைவிட்டு விலகியவன் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான் (9)

      • “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி” (14)

      • தாராள குணமுள்ளவன் செழிப்பான் (25)

      • சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான் (28)

    • 12

      • கண்டிக்கப்படுவதை வெறுக்கிறவன் புத்தியில்லாதவன் (1)

      • “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்” (18)

      • சமாதானத்துக்காகப் பாடுபடுகிறவர்களுக்குச் சந்தோஷம் (20)

      • பொய் பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார் (22)

      • கவலை ஒருவரின் இதயத்தைப் பாரமாக்கும் (25)

    • 13

      • ஆலோசனை கேட்கிறவர்கள் ஞானமுள்ளவர்கள் (10)

      • எதிர்பார்ப்பு தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும் (12)

      • உண்மையுள்ள தூதுவனின் செய்தியால் நன்மைகள் (17)

      • ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான் (20)

      • கண்டித்துத் திருத்துவது அன்பின் அடையாளம் (24)

    • 14

      • இதயத்தின் வேதனை இதயத்துக்குத்தான் தெரியும் (10)

      • சரியென்று தோன்றுகிற ஒரு வழி மரணத்தைக் கொண்டுவரலாம் (12)

      • விவரம் தெரியாதவன் எல்லாவற்றையும் நம்பிவிடுகிறான் (15)

      • பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் (20)

      • அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம் (30)

    • 15

      • சாந்தமான பதில் கோபத்தைத் தணிக்கும் (1)

      • யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன (3)

      • நேர்மையானவரின் ஜெபம் கடவுளுக்குப் பிரியமானது (8)

      • கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும் (22)

      • பதில் சொல்வதற்கு முன்பு யோசி (28)

    • 16

      • யெகோவா உள்நோக்கத்தை ஆராய்கிறார் (2)

      • நீ செய்வதையெல்லாம் யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு (3)

      • சரியான தராசுகள் யெகோவாவிடமிருந்து வந்தவை (11)

      • அகம்பாவம் வந்தால் அழிவு வரும் (18)

      • நரைமுடி அழகான கிரீடம் (31)

    • 17

      • நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யாதே (13)

      • வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அங்கிருந்து போய்விடு (14)

      • உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான் (17)

      • “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து” (22)

      • பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான் (27)

    • 18

      • தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் சுயநலவாதி, ஞானம் இல்லாதவன் (1)

      • யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை (10)

      • சொத்து பாதுகாப்பு தரும் என்பது வெறும் கற்பனையே (11)

      • இருதரப்பு வாதத்தையும் கேட்பதுதான் ஞானம் (17)

      • கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பன் (24)

    • 19

      • விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும் (11)

      • சண்டைக்கார மனைவி ஒழுகுகிற கூரை போன்றவள் (13)

      • விவேகமுள்ள மனைவி யெகோவா தருகிற சொத்து (14)

      • நம்பிக்கை இருக்கும்போதே பிள்ளையைக் கண்டித்துத் திருத்து (18)

      • ஆலோசனையைக் கேட்பதுதான் ஞானம் (20)

    • 20

      • திராட்சமது கேலி செய்யும் (1)

      • சோம்பேறி குளிர் காலத்தில் உழ மாட்டான் (4)

      • மனிதனின் யோசனைகள் ஆழமான தண்ணீர் போன்றவை (5)

      • அவசரப்பட்டு நேர்ந்துகொள்ளாதே (25)

      • இளைஞர்களின் அழகு அவர்களுடைய பலம் (29)

    • 21

      • ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் (1)

      • பலியைவிட நீதி நியாயம் முக்கியம் (3)

      • கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் (5)

      • ஏழையின் கதறலைக் கேட்காவிட்டால் நம் கதறலும் கேட்கப்படாது (13)

      • யெகோவாவுக்கு எதிரான ஞானம் இல்லை (30)

    • 22

      • நிறைய சொத்துகளைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது (1)

      • சிறுவயது பயிற்சி வாழ்நாளெல்லாம் உதவும் (6)

      • சோம்பேறி, வெளியே சிங்கம் நிற்பதாகச் சொல்லி பயப்படுகிறான் (13)

      • தண்டனை முட்டாள்தனத்தை நீக்கும் (15)

      • திறமையாக வேலை செய்கிறவன் ராஜாக்கள்முன் நிற்பான் (29)

    • 23

      • விருந்துக்கு அழைக்கப்பட்டால் விவேகம் தேவை (2)

      • சொத்து சேர்ப்பதில் குறியாக இருக்காதே (4)

      • சொத்துகள் உன்னைவிட்டுப் பறந்துவிடும் (5)

      • அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறவர்களோடு சேராதே (20)

      • மதுபானம் பாம்புபோல் கடிக்கும் (32)

    • 24

      • அக்கிரமக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே (1)

      • வீடு ஞானத்தால் கட்டப்படும் (3)

      • நீதிமான் விழுந்தாலும் எழுந்து நிற்பான் (16)

      • பழிக்குப் பழி வாங்காதே (29)

      • தூங்கிக்கொண்டே இருந்தால் வறுமைதான் வரும் (33, 34)

  • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

    • 25

      • ரகசியங்களை அம்பலப்படுத்தாதே (9)

      • சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை (11)

      • அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே (17)

      • நெருப்புத் தணலை எதிரியின் தலைமேல் குவிப்பது (21, 22)

      • நல்ல செய்தி குளிர்ந்த தண்ணீர் போன்றது (25)

    • 26

      • சோம்பேறிகளைப் பற்றிய விவரிப்பு (13-16)

      • அடுத்தவர் சண்டையில் தலையிடாதே (17)

      • விளையாட்டுக்காக ஏமாற்றாதே (18, 19)

      • விறகு இல்லையென்றால் நெருப்பு இல்லை (20, 21)

      • இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு (22)

    • 27

      • நண்பனின் கண்டிப்பு நன்மை தரும் (5, 6)

      • என் மகனே, என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து (11)

      • இரும்பை இரும்பு கூர்மையாக்குகிறது (17)

      • உன் மந்தையைப் பற்றித் தெரிந்துகொள் (23)

      • சொத்து என்றென்றும் நிலைக்காது (24)

    • 28

      • கடவுள் சொல்வதைக் கேட்காதவனின் ஜெபம் அருவருப்பானது (9)

      • குற்றத்தை ஒத்துக்கொள்கிறவன் இரக்கம் பெறுவான் (13)

      • தப்பு செய்யாமல், திடீர் பணக்காரனாகிவிட முடியாது (20)

      • போலியாகப் புகழ்வதைவிட தவறைக் கண்டிப்பது நல்லது (23)

      • தாராள குணமுள்ளவனுக்கு ஒரு குறையும் வராது (27)

    • 29

      • பிள்ளையை இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவமானம்தான் வரும் (15)

      • வழிநடத்துதல் இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள் (18)

      • கோபக்காரன் சண்டையைக் கிளப்புகிறான் (22)

      • மனத்தாழ்மையால் மகிமை (23)

      • மனித பயம் ஒரு கண்ணி (25)

  • ஆகூரின் வார்த்தைகள் (1-33)

    • 30

      • வறுமையும் வேண்டாம், அதிக செல்வமும் வேண்டாம் (8)

      • ஒருபோதும் திருப்தி அடையாதவை (15, 16)

      • அடையாளத்தை விட்டுச் செல்லாதவை (18, 19)

      • கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண் (20)

      • இயல்பாகவே ஞானமுள்ள உயிரினங்கள் (24)

  • லேமுவேல் ராஜாவின் வார்த்தைகள் (1-31)

    • 31

      • திறமைசாலியான மனைவியை யாரால் கண்டுபிடிக்க முடியும்? (10)

      • சுறுசுறுப்பானவள், கடினமாக உழைப்பவள் (17)

      • அவளுடைய நாவில் அன்பு (26)

      • பிள்ளைகளும் கணவனும் அவளைப் புகழ்கிறார்கள் (28)

      • வசீகரமும் அழகும் வீண் (30)