Skip to content

கடவுள் வெறுமனே ஒரு சக்தியா?

கடவுள் வெறுமனே ஒரு சக்தியா?

பைபிள் தரும் பதில்

 கடவுள் ஈடிணையற்ற விதத்தில் தன்னுடைய சக்தியை இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் பயன்படுத்துகிறார். கோடானுகோடி நட்சத்திரங்களை அவர் படைத்த விதத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது; “வானத்தை அண்ணாந்து பாருங்கள். அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்? அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர். அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார். அவருடைய அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும், அவற்றில் ஒன்றுகூட குறையாமல் இருக்கிறது.”—ஏசாயா 40:25, 26.

 ஆனால், கடவுள் வெறுமனே ஒரு சக்தி அல்ல. அன்பு, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் அவருக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 11:5; யோவான் 3:16) மனிதர்கள் நடந்துகொள்கிற விதம் கடவுளுடைய உணர்ச்சிகளைப் பாதிக்கலாம் என்றும்கூட அது சொல்கிறது.—சங்கீதம் 78:40, 41.