Skip to content

பைபிள் வீடியோக்கள்​—முக்கிய போதனைகள்

இந்தச் சிறிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் முக்கியமான பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன; அதோடு, இவற்றில் நிறைய வீடியோக்கள், கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டிலுள்ள பாடங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.

பிரபஞ்சம் படைக்கப்பட்டதா?

படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை நிறைய பேர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், அல்லது அவையெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்கிறார்கள். ஆனால், பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா?

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களை பாருங்கள்.

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா?

எல்லா வல்லமையும் உள்ளவர், படைப்பாளர், ஆண்டவர் என்றெல்லாம் கடவுளுக்கு நிறைய பெயர் இருக்கு. கடவுளோட பெயர், 7000-க்கும் அதிகமான தடவை பைபிள்ல இருக்கு.

பைபிளின் நூலாசிரியர் யார்?

பைபிளை மனிதர்கள் எழுதி இருந்தால் அதை கடவுளுடைய வார்த்தை என்று சொல்வது சரியா? யாருடைய எண்ணங்கள் பைபிளில் இருக்கிறது?

பைபிளை நம்பலாமா?

பைபிளின் நூலாசியர் கடவுளாக இருந்தால், பைபிளை போல் வேறு எந்த புத்தகமும் இருக்க முடியாது.

கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

நம்முடைய முழு பூமியும் ரொம்ப அழகாக இருக்கிறது. இது, சூரியனிலிருந்து சரியான தூரத்தில் இருக்கிறது. இது சரியான கோணத்தில் சாய்ந்திருக்கிறது. அதோடு, சரியான வேகத்திலும் சுற்றுகிறது. கடவுள் ஏன் இவ்வளவு முயற்சி எடுத்து பூமியைப் படைத்திருக்கிறார்?

நாம் எதற்காக வாழ்கிறோம்?

உண்மையான சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் கண்டுபிடிக்க எது உதவும் என்று பாருங்கள்.

இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்?

இறந்துபோன நிறைய பேர் லாசருவைப் போல உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது.

உண்மையிலேயே நரகம் என்ற ஒன்று இருக்கிறதா?

”கடவுள் அன்பாகவே இருக்கிறார்“ என்பதால், முன்பு செய்த தவறுக்காக மனிதர்களை கடவுள் நரகத்தில் வதைக்க மாட்டார் என்று பைபிள் சொல்கிறது.

இயேசு கிறிஸ்து கடவுளா?

இயேசு கிறிஸ்துவும் சர்வவல்லமையுள்ள கடவுளும் ஒரே நபர்தானா? அல்லது, அவர்கள் தனித்தனி நபர்களா?

இயேசு ஏன் இறந்தார்?

நம்முடைய பாவங்களுக்காக இயேசு இறந்தார் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒருவருடைய பலி, லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்யுமா?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

இயேசு பூமியில் ஊழியம் செய்த காலம் முழுக்க, வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார். அந்த ராஜ்யம் வர வேண்டும் என்றுதான் பல நூற்றாண்டுகளாக அவருடைய சீஷர்கள் ஜெபம் செய்து வந்திருக்கிறார்கள்.

கடவுளுடைய ஆட்சி 1914-ல் ஆரம்பமானது

2,600 வருஷங்களுக்கு முன்பு, புகழ்பெற்ற ஒரு ராஜாவின் கனவில், எதிர்காலத்தில் நடக்கப்போவதை கடவுள் காட்டினார். அது இப்போது நிறைவேறி வருகிறது.

1914-லிருந்து உலகம் மாறிவிட்டது

1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் மனப்பான்மையும் ரொம்ப மோசமாகி வருவது, ‘கடைசி நாட்களை’ பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருகின்றன என்பதைக் காட்டுகிறது.

இயற்கை பேரழிவுகளுக்கு கடவுள் காரணமா?

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர், பைபிளிலிருந்து என்ன தெரிந்துகொண்டார்கள் என்று சொல்வார்கள்.

கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

திருப்தியான, ஆறுதலான பதிலை பைபிள் கொடுக்கிறது.

எல்லா விதமான வணக்கத்தையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

நாம் எந்த மதத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

உருவங்களை வைத்து வணங்குவது கடவுளுக்குப் பிடிக்குமா?

பார்க்க முடியாத கடவுளிடம் நெருங்கிப்போக அவை உதவுமா?

எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்பாரா?

சுயநலத்துக்காக ஒருவர் செய்கிற ஜெபத்தைக் கடவுள் கேட்பாரா? மனைவியைக் கொடுமைப்படுத்துகிறவரின் வேண்டுதலை அவர் ஏற்றுக்கொள்வாரா?

திருமணத்தை கடவுள் எப்படி பார்க்கிறார்?

உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். பைபிள் தரும் நல்ல ஆலோசனைகள் நிறைய தம்பதிகளுக்கு உதவி செய்திருக்கிறது.

ஆபாசம்—கடவுளுக்கு எதிரான பாவமா?

”ஆபாசம்“ என்ற வார்த்தை பைபிளில் இருக்கிறதா? ஆபாசத்தை பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?