Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்பெயின் நாட்டின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் டோலிடோ நகரம் படம் பிடித்து காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் இங்கு அலைமோதும். 1986-ம் வருஷம் உலக பாரம்பரிய தளமாக இந்த நகரம் அறிவிக்கப்பட்டது.

நாடுகளும் மக்களும் | ஸ்பெயின்

ஸ்பெயினை சுற்றிப் பார்க்கலாமா?

ஸ்பெயினை சுற்றிப் பார்க்கலாமா?

ஸ்பெயினில் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அதன் நில அமைப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன. கோதுமை வயல்கள், திராட்சை தோட்டங்கள், மற்றும் ஒலிவ மரங்கள் ஸ்பெயினின் அழகுக்கு அழகு சேர்கின்றன. ஸ்பெயினுக்கு தெற்கே, 14 கி.மீ. (9 மைல்) தூரத்துக்கு தண்ணீரைக் கடந்தால் ஆப்பிரிக்க கண்டத்தைத் தொட்டுவிடலாம்.

ஐரோப்பாவின் தென்மேற்கு மூலையில் இருக்கும் இந்தப் பகுதியில் ஃபினீஷியர்கள், கிரேக்கர்கள், கார்தாஜினியர்கள் என பலர் குடியேறினார்கள். கி.மு. 3-ம் நூற்றாண்டில் ரோமர்கள் இந்தப் பகுதியை கைப்பற்றினார்கள். அதற்கு, ஹிஸ்பானியா என்று பெயர் வைத்தார்கள். பிறகு, விஸிகோத்தியர்களும் மூர்களும் அதில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தை அங்கு விட்டு சென்றார்கள்.

2015-ல் மட்டும் 6 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஸ்பெயினை சுற்றிப் பார்க்க வந்தார்கள். இங்கு இருக்கும் அருமையான சீதோஷ்ணம், தங்கம் போல் ஜொலிக்கும் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுக்கின்றன. அதோடு, இந்த நாட்டின் கலைநயமிக்க... சரித்திர புகழ் பெற்ற... பல கட்டிடங்களைப் பார்க்கவும் மக்கள் குவிகிறார்கள். ஸ்பானிய உணவை சாப்பிட்டு மகிழ சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள். கடல் உணவு, பதப்படுத்தப்பட்ட ஹாம் (பன்றி இறைச்சி), கூழ், சாலடுகள், ஒலிவ எண்ணெயில் தயாரிக்கப்பட்ட காய்கறி உணவு வகைகள் ஸ்பெயினில் அதிகமாக கிடைக்கும். ஸ்பானிய ஆம்லெட், பாயலா (paella) மற்றும் டாபாஸ் (tapas) உலகளவில் பிரபலமான உணவு வகைகள் என்று சொல்லலாம்.

மாரிஸ்கேடா—ஒரு வகையான கடல் உணவு

ஃபிலமெங்கோ நடனம்

ஸ்பானிய மக்கள் எல்லாரிடமும் சகஜமாகவும் நட்பாகவும் பழகுவார்கள். இங்கு பலர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களில் சிலரே சர்ச்சுகளுக்கு போகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து நிறைய பேர் ஸ்பெயினில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு தங்கள் மத நம்பிக்கைகளைப் பற்றியும் சம்பிரதாயங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசுவது ரொம்ப பிடிக்கும். இவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் விஷயங்களை யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள்.

2015-ல் 10,500-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் 70 ராஜ்ய மன்றங்களை, அதாவது வணக்க ஸ்தலங்களை, கட்டவும் புதுப்பிக்கவும் செய்தார்கள். சில மன்றங்களைக் கட்டுவதற்கான இடத்தை அந்த நாட்டின் அரசாங்கமே இலவசமாக கொடுத்திருக்கிறது. வித்தியாசமான நாடுகளில் இருந்து மக்கள் ஸ்பெயினில் குடியேறி இருப்பதால் யெகோவாவின் சாட்சிகள் ஸ்பானிஷ் மொழியோடு சேர்த்து 30-க்கும் அதிகமான மொழிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். 2016-ல் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சியில் 1,86,000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள்.