Skip to content

ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கவில்லை, என்ன செய்வது?

ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கவில்லை, என்ன செய்வது?

நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 படிப்பதால் வரும் நன்மைகளை யோசியுங்கள். படிப்பதால் பிற்காலத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய ஸ்கூல் பாடங்கள் எல்லாமே இப்போதைக்குப் பிரயோஜனமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், வித்தியாசமான பாடங்களைக் கற்றுக்கொண்டால், உலகத்தில் நடக்கிற நிறைய விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வித்தியாசப்பட்ட ஆட்களிடம் பேசுகிற திறனை வளர்த்துக்கொள்ள முடியும்; அதனால், நீங்கள் ‘எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆக’ முடியும். (1 கொரிந்தியர் 9:22) உங்களுடைய யோசிக்கும் திறன்கூட மெருகேறும்; இது பிற்காலத்தில் உங்களுக்குக் கண்டிப்பாகக் கைகொடுக்கும்.

ஸ்கூல் படிப்பை முடிப்பது அடர்த்தியான காட்டைத் தாண்டுவதுபோல் கஷ்டமானதுதான்; ஆனால், சரியான கருவிகள் இருந்தால் இரண்டையுமே செய்ய முடியும்

 உங்கள் டீச்சருடைய குறைகளைப் பார்க்காதீர்கள். உங்கள் டீச்சர் பாடம் எடுத்தால் ரொம்ப அறுவையாக இருக்கிறதா? அப்படியென்றால், அவர் சொல்லிக்கொடுக்கும் விதத்தைக் கவனிக்காமல் அவர் சொல்லிக்கொடுக்கும் விஷயத்தைக் கவனியுங்கள். உங்கள் டீச்சர் இதுவரை நூற்றுக்கணக்கான தடவை அதே பாடங்களை மற்ற வகுப்புகளுக்கு நடத்தியிருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், முதலில் நடத்தியது போலவே உற்சாகமாக பாடத்தை நடத்த அவரால் முடியாமல் இருக்கலாம்.

 டிப்ஸ்: குறிப்புகளை எழுதுங்கள், இன்னுமதிக தகவல்களை மரியாதையோடு கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள், பாடத்தில் ஆர்வம் காட்டுங்கள். ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.

 உங்கள் திறமைகள் வளரும் என்று புரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஸ்கூல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவரும். ‘கடவுள் உனக்குக் கொடுத்த வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு)’ என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 1:6 கடவுளுடைய சக்தியின் ஏதோவொரு வரம் தீமோத்தேயுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ‘வரம்’ வீணாகிப் போகாதபடி அதை அவர் வளர்க்க வேண்டியிருந்தது. படிப்பு சம்பந்தப்பட்ட உங்கள் திறமைகளைக் கடவுள் உங்களுக்கு நேரடியாகத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், உங்களுக்கென்று விசேஷ திறமைகள் இருக்கின்றன. உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டுபிடிக்கவும் வளர்க்கவும் உங்கள் ஸ்கூல் உங்களுக்கு உதவும்.